இந்திய கிரிக்கெட்

டீம் செலக்சன் பேட்டிங் பொசிஷன் கம்பீர் தப்பு செய்தாரா.. 2021ல் ஆஸி செய்த அதே மாஸ்டர் பிளானா?.. முழு அலசல்

இந்திய அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லும் வாய்ப்பை தவற விட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அணி தேர்வு மற்றும் பேட்டிங் ஆர்டரில் தவறு செய்திருப்பதாக இந்திய ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இது குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.

- Advertisement -

கடந்த இரண்டு போட்டிகளாக இந்திய அணியில் சிவம் துபே விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் இரண்டு வேகம் பந்துவீச்சாளர்கள் இருக்க பிளேயிங் லெவனில் மூன்றாவது மிதவேகப் பந்துவீச்சாளராக இருக்கிறார். இதனால் ஃபாஸ்ட் பௌலிங் யூனிட்டுக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது.

அடுத்து சிவம் துபே இந்த அணியின் ஆறாவது பந்துவீச்சாளராக இருக்கிறார். மேலும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் தேவையான அளவுக்கு மூன்று வெரைட்டி தரக்கூடிய சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். எனவே சிவம் துபே பிளேயிங் லெவனில் இருப்பதும், பிளேயிங் லெவலை தேர்வு செய்த விதமும் சரியாகவே இருக்கிறது.

மேலும் இலங்கை அணியில் இடது கை சுழல் பந்துவீச்சு மற்றும் லெக் ஸ்பின் மற்றும் ஆப் ஸ்பின் என மூன்று வெரைட்டி சுழல் பந்துவீச்சு இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி ரைட் லெப்ட் பேட்டிங் காம்பினேஷனை அமைப்பது தேவையாக இருக்கிறது. இதன் காரணமாகவே முதல் போட்டியில் நான்காவது இடத்தில் வாஷிங்டன் சுந்தரும், இரண்டாவது போட்டியில் பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் சிவம் துபேவும் களம் இறக்கப்பட்டிருக்கிறார்கள் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -

மேலும் இப்படியான இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்களில் தேவையான பரிசோதனை முயற்சிகளை செய்தால்தான் நமக்கு சரியான முடிவுகள் கிடைக்கும். அப்பொழுதுதான் ஐசிசி தொடர்களுக்கு செல்லும் பொழுது சரியான வீரர்களுடன் தெளிவான திட்டத்துடன் சென்று விளையாட முடியும். ஐசிசி தொடருக்கு சென்று நம்மால் பரிசோதனைகளை செய்ய முடியாது.

உதாரணமாக ஆஸ்திரேலியா இரு நாடுகளுக்கு இடையேயான வெள்ளைப் பந்து தொடர்களில் பெரிய அளவில் பரிசோதனை முயற்சிகளை செய்யும். அந்தத் தொடர்களை இழப்பது குறித்து அவர்கள் பெரிதாகக் கவலைப்பட மாட்டார்கள். ஐசிசி தொடர்களை வெல்வதற்கு ஆஸ்திரேலியா அணியின் திட்டங்களில் முதன்மையான திட்டமே இதுதான்.

கடந்த 2021 ஆம் ஆண்டு பங்களாதேஷ் சென்ற ஆஸ்திரேலியா அணி நல்ல பவுலிங் யூனிட்டை வைத்துக்கொண்டு பேட்டிங் யூனிட்டில் புதுமுக வீரர்களை வைத்து பரிசோதனை செய்தது. ஐந்து போட்டிகள் கொண்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான அந்த டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 1-4 என மோசமாகத் தோற்றது. ஆனால் அதேவேளையில் அதே ஆண்டு யுஏஇ-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதையும் படிங்க : விதியை மீறி 1 வருடம் கிரிக்கெட் ஆட தடை.. 9 வருட போராட்டம்.. யார் இந்த வாண்டர்சே?

எனவே தற்பொழுது தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்யக்கூடிய பரிசோதனைகள் எல்லாமே சரியானதுதான் என்றும், வீரர்கள் இலங்கையின் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலைக்கு தகுந்தபடி விளையாடாததுதான் தோல்விக்கு காரணம் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -
Published by