ருதுராஜ் பத்தி இந்த விஷயம் யாருமே பேசல.. ஆனா கண்டிப்பா இதை எல்லாருமே பேசனும் – இந்திய முன்னாள் வீரர் பேட்டி

0
108
Ruturaj

நேற்று லக்னோ அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த போதும் கூட, சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் சிறப்பாக விளையாடி சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று. டி20 உலகக் கோப்பை இந்திய அணித் தேர்வு நடைபெற்று வருவதால், இவரையும் கணக்கில் எடுக்க வேண்டுமென ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” சென்னை அணி முதலில் பேட்டிங் செய்யும் பொழுது ருதுராஜ் சதம் அடித்தார். இப்பொழுது அவரை டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டுமா என்பதுதான் கேள்வி. ஆனால் நன்றாக யோசித்துப் பாருங்கள் அவரை பற்றி யாருமே பேசவில்லை. ஆனால் நிச்சயம் அவர் குறித்து பேச வேண்டும். ஏனென்றால் அவர் இப்போது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் சதம் அடித்திருக்கிறார்.

- Advertisement -

ருதுராஜ் மிகவும் சிறப்பானவர். 150 ஆண்டு கால கிரிக்கெட்டில் சில விஷயங்கள் எப்போதும் மாறாது. உங்கள் பேட்டிங் நுட்பம் நன்றாக இருந்து, நீங்கள் பந்தின் தகுதிக்கு ஏற்ப விளையாட முடியும் பொழுது, நீங்கள் எப்பொழுதும் சிறப்பான பேட்ஸ்மேனாக இருப்பீர்கள். இது கிரிக்கெட் எவ்வளவு மாறினாலும் மாறாத விஷயமாக இருக்கும். ருதுராஜ் அப்படிப்பட்ட வீரராகத்தான் இருக்கிறார்.

அவர் 180 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினான். மைதானம் எல்லா பக்கத்திலும் பந்துகளை அடித்தார். அவரால் அணியில் ஸ்கோரை 230 ரண்களுக்கு கொண்டு சென்றிருக்க முடியாது. அங்கு ஆரம்பத்தில் பனி இல்லை. மேலும் விக்கெட்டில் பந்து கொஞ்சம் நின்று வந்தது. அவரால் முடிந்ததை மிகச் சரியாக செய்திருக்கிறார்.

சிவம் துபே வித்தியாசமாக விளையாடுகிறார் என்பதால் அவருக்கு டி20 உலக கோப்பைக்கு டிக்கெட் புக் செய்கிறேன். அவர் சுழற் பந்துவீச்சை நன்றாக அடிப்பார் என்பதால், அவர் வந்தால் சுழல் பந்துவீச்சு வீசப்படுவதில்லை. எதிரணியினர் பயப்படுகிறார்கள். ஆனால் அவர் வேகப்பந்துவீச்சாளர்களையும் மிகவும் கண்ணியமாக அடித்து நொறுக்குகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 210 ரன் உங்களுக்கு தான் பெருசு.. எங்களுக்கு இல்லை.. தோல்விக்கு காரணம் இதுதான் – பிளமிங் பேட்டி

அவர் அடித்த சில பந்துகளை டாக்ஸி வைத்துதான் கொண்டு வர வேண்டும் என்பது போல இருந்தது. சிவம் துபே சந்தேகம் இல்லாமல் டி20 உலகக்கோப்பை விளையாடுவதற்கு செல்ல வேண்டும். அவர் மிகச் சிறப்பான முறையில் இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.