அடிலெய்டு மைதானத்தில் விராட் கோலி பெயரில் ஸ்டாண்ட் வைப்பார்கள் – 6 வருடத்திற்கு முன் தோனி பேசியது தற்போது வைரல்!

0
1740

அடிலெய்டு மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டுக்கு விராட் கோலியின் பெயரை நிச்சயம் வைப்பார்கள் என்று 6 வருடத்திற்கு முன்பு மகேந்திர சிங் தோனி பேசியது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றின் நான்காவது போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிராக விளையாடியது.

- Advertisement -

அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கே எல் ராகுல் 51 ரன்கள், விராட் கோலி 44 பந்துகளில் 64 ரன்கள் அடித்திருந்தனர். விராட் கோலி இத்தொடரில் அடிக்கும் மூன்றாவது அரை சதம் இதுவாகும்.

இந்த உலகக் கோப்பையில் 4 போட்டிகளில் மூன்று அரைசதம் அடித்து தற்போது வரை அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், விராட் கோலிக்கு மிகவும் பிடித்த ஆஸ்திரேலியா மைதானம் அடிலெய்டு. தனது முதல் டெஸ்ட் சதத்தை இங்குதான் அடித்தார். அந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விலாசி அசத்தினார்.

ஒருநாள் போட்டிகளிலும் அடிலெய்டு மைதானத்தில் சதம் அடித்திருக்கிறார். மொத்தம் ஐந்து சதங்களை இந்த மைதானத்தில் மட்டுமே அடித்திருக்கிறார். இப்படி அடிலெய்டு மைதானத்திற்கும் விராட் கோலிக்கும் இருக்கும் காதலை நாம் அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

இந்நிலையில் ஆறு வருடங்களுக்கு முன்பு விராட் கோலி மற்றும் அடிலெய்டு மைதானம் இரண்டையும் பற்றி மகேந்திர சிங் தோனி பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில்,

“விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிப்பதற்குள் அடிலெய்டு மைதானத்தின் ஸ்டான்டிற்கு விராட்கோலி பெயர் வைப்பார்கள். அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அது மட்டுமல்லாது, இன்னும் சில ஆஸ்திரேலியா மைதானங்களிலும் அவரது பெயர் இருக்கும்.” என்று பெருமிதமாக பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோ:

- Advertisement -