தோனி இந்தியாவில் மட்டுமல்ல.. தென் ஆப்பிரிக்காவிலும் கிங்தான்.. என் காதலியே சொல்கிறாள் – டேல் ஸ்டெயின் பேட்டி

0
46
Dhoni

தற்போது மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரின் முகமாக மாறி வருகிறார். சிஎஸ்கே அணி விளையாடும் எல்லா மைதானங்களிலும் அவருக்கு என்று ஒரு பெரிய கூட்டம் கூடி வருகிறது. இந்தியா தாண்டி தோனி தென் ஆப்பிரிக்காவையும் தன்னையும் மிகவும் வசீகரித்து விட்டதாக டேல் ஸ்டெயின் கூறியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பாகவே சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, புதிய கேப்டனாக ருதுராஜை தோனி கொண்டு வந்தார். புதிய கேப்டன் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்தாலும் கூட, தேவைப்படும் நேரங்களில் களத்தை தன் கட்டுப்பாட்டில் தோனி இப்பொழுதும் வைத்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் வயதாகிக் கொண்டிருப்பதால் தன்னுடைய பலம் எது என உணர்ந்து, கடைசி கட்டத்தில் பேட்டிங் வந்து, தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் சிக்ஸர்களை அடித்து, அணியின் வெற்றிக்கு உதவி செய்வதோடு, ரசிகர்களுக்கு மிகப்பெரிய பரவசமான உணர்வை கொடுத்து செல்கிறார்.

சிஎஸ்கே அணி கடந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக விளையாடிய பொழுது, ஹர்திக் பாண்டியா வந்து வீச்சில் சந்தித்த நான்கு பந்துகளில் 3 சிக்ஸர்கள் உடன் 20 ரன்கள் எடுத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். இறுதியாக அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில்தான் வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தோனி குறித்து பேசி இருக்கும் டேல் ஸ்டெயின் கூறும்பொழுது ” அவர் ஐபிஎல் தொடரில் இந்தியாவில் இருப்பவர்களை மட்டும் மூழ்கடிக்கவில்லை. தென் ஆப்பிரிக்காவிலும் என்னையும் சேர்த்து மூழ்கடித்து இருக்கிறார். நான் நேர்மையாக சொல்வது என்றால் அதிகம் டிவி பார்க்க மாட்டேன். ஆனால் இப்பொழுது தோனி விளையாடுகின்ற காரணத்தினால் நான் டிவி முன்பு ஒட்டிக் கொண்டிருக்கிறேன். டிவி உடைந்து விடும் என்பதாக என்னுடைய காதலி கூறுகிறாள்.

- Advertisement -

இதையும் படிங்க : பும்ராவ ஸ்வீப் ஷாட் விளையாடனுங்கறது என் கனவு.. இதுக்காக நான் தனியா தயாரானேன் – அஷுதோஷ் சர்மா

நாம் தோனியிடம் என்ன எதிர்பார்க்கிறோமோ அது அப்படியே கிடைக்கிறது. ரசிகர்களின் பார்வையில் இருந்து தோனியை பார்ப்பது மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கிறது. அவர் மிகச்சிறந்த கிரேட் பிளேயர். அவர் இந்த ஐபிஎல் சீசன் மட்டும் இல்லாமல் இன்னும் சில ஐபிஎல் சீசர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.