“7-ம் நம்பர் ஜெர்சியை செலக்ட் செய்ய என்ன காரணம்” – தாறுமாறான கிண்டலில் தோனி பதில்

0
788
Dhoni

இந்திய கிரிக்கெட் தாண்டி உலக கிரிக்கெட் வைத்து மகேந்திர சிங் தோனியை புகழ்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது.

கிரிக்கெட் களத்திற்கு உள்ளே அவர் முடிவுகளை எடுக்கும் அவரது வேகம் மட்டுமல்லாது, அந்த முடிவுகள் தனித்துவமானதாக இருக்கும். இதன் காரணமாகத்தான் டி20 கிரிக்கெட்டில் அவர் மிகவும் வெற்றிகரமாக இருக்கிறார். ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் முடிவுகள் மிக வேகமாக எடுக்கப்பட வேண்டும்.

- Advertisement -

அதே சமயத்தில் களத்திற்கு வெளியே அணியை வழிநடத்துவது, வீரர்களை கட்டுப்பாட்டில் மதிப்புடன் வைப்பது, மேலும் கேப்டன் பொறுப்பை சுற்றி உள்ள அழுத்தங்களை புத்திசாலித்தனமாக கையாளுவது என, எல்லாத் துறையிலும் இருப்பவர்கள் பின்பற்றுவதற்கான முன்மாதிரியாக மகேந்திர சிங் தோனி இருந்திருக்கிறார்.

தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பில், அதைச் சிறப்பாக செய்வதற்கும், அதில் வரும் தடைகளையும் நெருக்கடிகளையும் முறியடிப்பதற்கும், அவர் எடுத்த முடிவுகள் மற்றும் அவருடைய நடத்தை உலக பிரசித்தம் பெற்றது.

அவரைப் பற்றி வெளியில் யார் என்ன சொன்னாலும் இன்று வரை அவர் அதற்கு பதில் சொன்னதே கிடையாது. அதற்கு செயலின் மூலம் ஏதாவது செய்வார், இல்லையென்றால் அப்படியே விட்டுவிடுவார்.

- Advertisement -

இப்படி மிகச் சீரியஸாக வெளியே தெரியும் மகேந்திர சிங் தோனி மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர். சில குறிப்பிட்ட வீரர்களுடன் அவர் மிகவும் கலகலப்பாக பழகக்கூடியவர். மேலும் அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொள்ளும் விதமே மிக அருமையாக இருக்கும். அவரை நீண்ட நேரம் பேச வைக்க வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு போட்டிகளின் முடிவின்போதும் நிறைய கேள்விகள் முன்வைக்கப்படும்.

இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் ஏழாம் நம்பர் ஜெர்சியை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு அவர் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் மிகவும் நகைச்சுவையாக பதில் அளித்து இருக்கிறார்.

இதையும் படிங்க : “திரில்லர் ஷோ.. இந்த இந்திய வீரருக்கு எதிரா விளையாடறது எங்க அதிர்ஷ்டம்” – இங்கிலாந்து கிறிஸ் வோக்ஸ் பேச்சு

கேள்விக்கு பதில் அளித்த மகேந்திர சிங் தோனி ” நான் ஏழாம் தேதியில்தான் பூமிக்கு வருவேன் என்று என் பெற்றோர்கள் முடிவு செய்து வைத்திருந்தார்கள். மேலும் ஜூலை மாதம் 7வது மாதமாக வருகிறது. அடுத்து நான் பிறந்த ஆண்டு 1981. 8ல் 1யை கழித்து விட்டால் 7தான் வரும். எனவே நான் வெளியே வந்து எனக்கு என்ன ஜெர்சி நம்பர் வேண்டும்? என்று அவர்கள் கேட்ட பொழுது, அதை தேர்வு செய்வது எனக்கு எளிதாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்