“திரில்லர் ஷோ.. இந்த இந்திய வீரருக்கு எதிரா விளையாடறது எங்க அதிர்ஷ்டம்” – இங்கிலாந்து கிறிஸ் வோக்ஸ் பேச்சு

0
740
Woakes

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்தியாவில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் யாரும் எதிர்பார்க்காத சுவாரசியத்தை எட்டி இருக்கிறது.

இதற்கு மிக முக்கிய காரணமாக இந்த டெஸ்ட் தொடருக்கு அமைக்கப்பட்ட இரண்டு ஆடுகளங்களும் சமீபத்தில் ஆண்டுகளில் இருந்த சுழல் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்கள் இல்லை.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டி ஐந்தாவது நாளுக்கு செல்லும் நிலையில் இருந்து நான்காவது நாளின் இறுதியில் முடிந்தது. இதேபோல் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நான்காவது நாளில் முடிந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் இரண்டரை நாட்களில் டெஸ்ட் போட்டிகள் முடிவுக்கு வந்தது பெரிய அயற்சியைக் கொடுத்தது. தற்பொழுது இது சரி செய்யப்பட்டு இருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் கூறும்பொழுது “விராட் கோலி இல்லாமல் வெளிப்படையாக ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள். விராட் கோலி விளையாடுவதை பார்க்க மிகவும் நன்றாக இருந்திருக்கும். அவரும் அவர் குடும்பத்தாரும் நலமாக இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். மேலும் அவர் கிரிக்கெட்டுக்கு திரும்பும் பொழுது நல்ல இடத்தில் திரும்புவார் என்றும் நம்புகிறேன். அவர் எங்களுடன் பல ஆட்டங்களில் விளையாடியதற்கு நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.

இந்தத் தொடர் பார்ப்பதற்கு மிகச் சிறந்த தொடராக அமையும். எங்கள் அணி வீரர்கள் இந்தியாவில் விளையாடுவதற்கு விரும்புகிறார்கள். இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு அற்புதமான இடம். இன்னும் பரபரப்பான டெஸ்ட் போட்டிகள் இந்த தொடரில் வரும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : “தம்பிக்கு காயம் இல்ல.. வேண்டாம்னு சொல்லி வெளியே அனுப்பிட்டாங்க” – ஸ்ரேயாஸ் பற்றி ஆகாஷ் சோப்ரா கருத்து

பும்ரா தனித்துவமான ஒரு வீரர். அவர் உலகத் தரம் வாய்ந்தவர். தற்பொழுது அவர்தான் அனைத்து வடிவங்களிலும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார். குறிப்பாக இந்தியா ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -