“தோனி இந்திய கிரிக்கெட்டின் வரம்.. அவர் மட்டும் கேப்டனா இல்லாம இருந்திருந்தா..!” – கம்பீர் ஆச்சரியமான பேச்சு!

0
795
Gambhir

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமானவர் மகேந்திர சிங் தோனி. அவருடைய பன்முகத்திறமை அவரை அணியில் மிகவும் தவிர்க்க முடியாத ஒரு வீரராக மாற்றியது. அதே காரணம் தான் உலக கிரிக்கெட்டில் அவருக்கு என்று ஒரு இடம் எப்பொழுதும் இருக்கிறது!

இந்திய கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், அதிரடி பேட்ஸ்மேனாக உள்ளே நுழைந்தவர்கள் யாரும் அவர்களுடைய இடத்தை குறைத்துக் கொண்டது கிடையாது. தொடர்ந்து மேல் வரிசையில் நின்று ரன்கள் எடுத்து, பெரிய வெளிச்சத்திலேயே இருப்பார்கள்.

- Advertisement -

இதில் மகேந்திர சிங் தோனி மட்டுமே விதிவிலக்கான ஒருவர். அவர் மட்டுமே கேப்டன் பொறுப்புக்கு பின்னால் தன்னை கீழே இறக்கிக் கொண்டு, அணியின் வெற்றிக்காக மாறியவர்.

மேலும் இந்திய அணிக்கு ஆரம்பத்தில் கிடைத்த விக்கெட் கீப்பர்கள் எல்லோருமே, முதலில் விக்கெட் கீப்பிங் வேலையை செய்வார்கள், அதற்கடுத்து பேட்டிங்கில் ஏதாவது பங்களிப்பு செய்ய முடிந்தால் செய்வார்கள். ஆனால் மகேந்திர சிங் தோனி தான் இரண்டையும் மிகத்திறமையாக செய்யக்கூடியவராக இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்தார்.

தற்பொழுது மிக ஆச்சரியமாக இந்த கருத்துக்களை எல்லாம் ஏற்று ஒருவர் பாராட்டி இருக்கிறார். அவர் யார் என்றால் கவுதம் கம்பீர். மகேந்திர சிங் தோனி குறித்து அவர் பேசும்போது “கேப்டனாக இருந்ததால் ஒரு பேட்ஸ்மேனாக சாதிக்க முடிந்த விஷயங்களை அவரால் செய்ய முடியவில்லை. கேப்டனாக எப்பொழுதும் நீங்கள் அணியைத்தான் முதலில் வைக்க வேண்டும்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி கேப்டனாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், அவர் தொடர்ந்து மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்திருக்கலாம். அப்படி அவர் பேட்டிங் செய்திருந்தால் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகளை படைத்திருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் நிறைய கோப்பைகளை கேப்டனாக வென்றுள்ளார். அதற்காக தன்னுடைய சர்வதேச ரன்களை தியாகம் செய்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டில் முன்பு விக்கெட் கீப்பர்கள் அந்த வேலையை மட்டும் செய்வார்கள். பிறகுதான் பேட்டிங் என்பது. ஆனால் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங் செய்தார். அடுத்துதான் விக்கெட் கீப்பர். அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஆசீர்வாதம்.
நாங்கள் ஏழாவது இடத்தில் ஆட்டத்தை வெல்லக்கூடிய ஒரு பேட்ஸ்மேனை அவரால் பெற்றோம். ஏனென்றால் அவருடைய பேட்டிங்க்கு அந்த சக்தி இருந்தது!” என்று கூறி இருக்கிறார்!