“தோனி கூல் மட்டும் கிடையாது அப்பப்ப கெட்ட வார்த்தையில் கூட திட்டுவார்” – இஷாந்த் ஷர்மா பரபரப்பு பேச்சு!

0
188

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர் இஷாந்த் சர்மா. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் பல வெற்றிக்கு காரணமாக இருந்தவர் இவர்.

2007 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக தனது டெஸ்ட் கிரிக்கெட்டை துவங்கிய இஷாந்த் சர்மா 2021 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக கடைசியாக டெஸ்ட் போட்டி விளையாடியிருக்கிறார் . அதன்பிறகு அவர் இந்திய அணியில் எடுக்கப்பட்டாலும் அவருக்கு ஆடும் உள்ளவனில் வாய்ப்பு தரப்படவில்லை. கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணிக்காக 105 டெஸ்ட் போட்டியிடில் விளையாடியிருக்கும் இவர் 311 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மேலும் என்பது ஒருநாள் போட்டிகளில் விளையாடிருக்கும் இவர் 115 விக்கெட்டுகளையும் 14 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி எட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . சமீபகாலமாக ஒரு நாள் மட்டும் டி20 போட்டிகளில் இருந்து ஓரம் கட்டப்பட்ட இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணியில் இடம் பெற்று வந்தார் .

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டன்மான மகேந்திர சிங் டோனி அனைத்து வீரர்களாலும் கேப்டன் கூல் என அழைக்கப்படுகிறார். போட்டியின் போது எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தனது கவனம் சிதறாமலும் கோபத்தை முகத்தில் காட்டாமல் நிதானமாகவும் அமைதியாகவும் இருப்பதால் எம் எஸ் தோனியை கிரிக்கெட் விமர்சகர்கள் முதல் அனைத்து வீரர்களும் கேப்டன் கூல் என அழைக்கின்றனர். எம் எஸ் தோனி 3 ஐசிசி டைட்டில்கள் மற்றும் ஐந்து ஐபிஎல் கோப்பைகள் இரண்டு சாம்பியன்ஸ் லீக் டைட்டில்கள் என பல வெற்றிகளை பெற்றதற்கு அவரது அமைதியான மற்றும் நிதானமான மனநிலை தான் காரணம் என பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது .

இந்நிலையில் இந்திய அணியின் வீரரான இஷாந்த் சர்மா தோனி பல நேரங்களில் அமைதியாக இருந்தாலும் சில நேரங்களில் கடுமையாக கோபப்படுவார் என கூறி ஆச்சரியத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறார் . இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் . இந்த சம்பவம் தொடர்பாக பேசியிருக்கும் இஷாந்த் சர்மா ” மகேந்திர சிங் டோனி பல திறமைகளை உள்ளடக்கிய ஒரு வீரர். அவற்றில் ஒன்று எந்த பரபரப்பான சூழ்நிலையிலும் அமைதியாக இருப்பது. ஆனால் சில நேரங்களில் அவர் கடுமையாக கோபப்படுவார். நானே அவரிடம் பலமுறை தட்டு வாங்கி இருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார் .

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ‘ தோனி கோபப்பட்டால் கெட்ட வார்த்தைகளால் திட்டுவார். ஒருமுறை நான் பந்தை வீசும் போது சரியாக அவரது கையை நோக்கி வீசவில்லை . அதே தவறை மூன்று முறை செய்தேன். அப்போது ஒழுங்காக கையை பார்த்து வீசி என்று கூறி ஒரு சில கெட்ட வார்த்தைகளையும் பேசினார் என தெரிவித்திருக்கிறார். இது ஒரு முறை அல்ல என்றும் இதுபோன்று இரண்டு அல்லது மூன்று தடவை நான் தோனியிடம் திட்டு வாங்கி இருக்கிறேன் எனவும் தெரிவித்திருக்கிறார். இந்தக் கருத்து தற்போது ரசிகர்களிடம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது . இதற்கு முன்பு இந்தியா மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னாவும் தோனி மைதானத்தில் கோபப்படுவார் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.