“சிஎஸ்கே 2008 முதல் ஐபிஎல்.. எனக்கு இந்த 5 பேர்தான் பெரிய சவாலா இருந்தாங்க” – தோனி பேட்டி

0
246
Dhoni

உலக டி20 லீக்குகளில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான கேப்டன், சிஎஸ்கே அணியின் மகேந்திர சிங் தோனிதான்!

மகேந்திர சிங் தோனி இதுவரையில் சிஎஸ்கே அணியை கேப்டனாக இருந்து 226 ஐபிஎல் போட்டிகளில் வழி நடத்தி இருக்கிறார். இதில் 133 வெற்றிகள் பெற்றிருக்கிறார். ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன் மகேந்திர சிங் தோனிதான்.

- Advertisement -

மேலும் அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் என்கின்ற சாதனையை, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உடன் மகேந்திர சிங் தோனி பகிர்ந்து இருக்கிறார்.

அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கும், அதிக முறை இறுதிப்போட்டிக்கும் அணியை அழைத்துச் சென்ற ஐபிஎல் கேப்டனாகவும் மகேந்திர சிங் தோனி இருந்து வருகிறார்.

ஐபிஎல் தொடர் வரலாற்றில் மகேந்திர சிங் தோனி போல இன்னொரு கேப்டன் அமைவது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். மேலும் ஒரு அணியில் கேப்டன், விக்கெட் கீப்பர், பினிஷர் என அவரைப் போல் இன்னொருவர் செயல்படுவதும் கடினம்.

- Advertisement -

இவர்கள் ஐபிஎல் தொடர் குறித்து மகேந்திர சிங் தோனி கூறும் பொழுது “பல வெளிநாட்டு வீரர்களை புரிந்து கொள்வதற்கு எனக்கு ஐபிஎல் உதவி செய்தது. நான் எதிரணி வீரர்களுடன் அதிகம் பேசியவன் கிடையாது. ஆனால் மற்ற வீரர்களை தெரிந்து கொள்ளவும் அவர்கள் கிரிக்கெட் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்றும், அவர்களின் கலாச்சாரத்தை அறியவும் எனக்கு ஐபிஎல் ஒரு வாய்ப்பைக் கொடுத்தது. இவை அனைத்தும் எனக்கு ஐபிஎல் தொடரை சுவாரஸ்யம் ஆக்கின.

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் அமைந்த சிஎஸ்கே அணி அதிக ஆல்ரவுண்டர்களைக் கொண்ட சமநிலையான அணியாக இருந்தது. அந்த அணியில் மேத்யூ ஹைடன், மைக் ஹசி,முத்தையா முரளிதரன் மகாய நெடினி மற்றும் ஜேக்கப் ஓரம் ஆகியோர் இருந்தனர். இவர்கள் அனைவரும் ட்ரெஸ்ஸிங் ரூமில் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வது பெரிய சவாலாக இருந்தது.

இதையும் படிங்க : தரம்சாலா பறந்த ரிங்கு சிங்.. உறுதியான வாய்ப்பு.. இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

நீங்கள் ஒரு அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தும் பொழுது ஒவ்வொரு வீரர்களையும் புரிந்து கொள்வது அவசியம். நீங்கள் ஒரு வீரரை தனிப்பட்ட முறையில் அறிந்தால் அவரது பலம் மற்றும் பலவீனம் தெரிந்துவிடும். பிறகு அணியை சரியான பாதையில் கொண்டு செல்வது எளிதாகிவிடும்” எனக் கூறியிருக்கிறார்