ருதுராஜும் என்னை மாதிரிதான்.. ஆனா இந்த பையன் வேடிக்கையானவன் – தோனி ஓபன் பேட்டி

0
964
Dhoni

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த கட்டத்தை நோக்கி மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து நகர்ந்து கொண்டு, அந்த இடத்திற்கு இளம் வீரர் ருதுராஜை கொண்டு வந்தார்.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் இரண்டு வெற்றிகளை பெற்று, புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. முன்பு ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக கொண்டு வந்த பொழுது களத்தில் நிலவிய குழப்பங்கள் ஏதும் தற்போது காணப்படவில்லை. போட்டியின் போது எல்லாம் சுமுகமாகவே செல்கின்றன.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் இந்த ஐபிஎல் தொடர் மினி ஏலத்தில் 1.80 கோடி ரூபாய்க்கு நியூசிலாந்தின் இடது கை துவக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா வாங்கப்பட்டார். கான்வே காயத்தின் காரணமாக கிடைக்காமல் போக, அவருடைய இடத்தில் விளையாடும் ரச்சின் ரவீந்தரா அதிரடியில் மிரட்டுகிறார். தற்பொழுது இரண்டு போட்டியில் விளையாடு இருக்கும் அவருடைய ஆவரேஜ் 41, ஆனால் ஸ்ட்ரைக் ரேட் 237 என அசத்தலாக இருக்கிறது.

மேலும் கடந்த இரண்டு போட்டிகளையும் எடுத்துக் கொண்டால் ஃபீல்டிங்கில் சிஎஸ்கே அணி மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக அணியின் மூத்த வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும் ரகானே இருவரும் அற்புதமான கேட்ச்களை எடுத்து, தங்கள் அணியின் இளம் வீரர்களுக்கு நல்ல ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்து வருகிறார்கள். ஆனால்கடத்த போட்டியில் சாய் சுதர்சன் பதிரனா ஓவரில் தந்த எளிய கேட்ச் வாய்ப்பை ரச்சின் ரவீந்தரா தவறவிட்டார்.

இது குறித்து ரச்சின் ரவீந்தரா இடம் கேட்ச்சை தவறவிட்ட பொழுது நீங்கள் தோனியை பார்த்தீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அப்பொழுது ரச்சின் ரவீந்திரன் பதில் சொல்வதற்கு முன்பாகவே, மகேந்திர சிங் தோனி இதற்கு உள்ளே வந்து பதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : சிஎஸ்கே கிடையாது.. 2024 ஐபிஎல் தொடரில் வீழ்த்த கடினமான அணி இதுதான் – ஸ்டீவ் ஸ்மித் கணிப்பு

இதற்கு பதில் அளித்த தோனி பேசும் பொழுது “புதிய கேப்டன் ருதுராஜ் இருக்கிறார். அதே சமயத்தில் நான் பொதுவாக கேட்ச் வாய்ப்புகளை யார் தவறவிட்டாலும், அதற்கு பெரிதாக எதிர்வினை ஆற்றக்கூடிய ஆள் கிடையாது. யாராவது தங்களுடைய முதல் போட்டி அல்லது இரண்டாவது போட்டியில் இப்படியான கேட்ச் வாய்ப்பை தவறவிடும்பொழுது, என்னை போல்தான் ருதுராஜும் பெரிதாக எடுத்துக் கொள்பவராக இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் ஃபீல்டிங்கில் ரச்சின் ரவீந்திர சுற்றி வருவதை பார்க்கையில் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.