ஐசிசி முதன்முறையாக 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு உலகக் கோப்பை தொடரை நடத்தியது. இந்த உலகக் கோப்பையை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி வென்றது.
இதன் காரணமாக இந்தியாவில் பட்டி தொட்டி எங்கும் டி20 கிரிக்கெட் வடிவத்தைப் பற்றியான அறிமுகமும் ஆர்வமும் மிகப்பெரியதாக உருவானது. திடீரென இந்த வடிவ கிரிக்கெட்டுக்கான ரசிகர்கள் பெரிய அளவில் உடனே கிடைத்தார்கள்.
இந்தியா கிரிக்கெட் வாரியம் இந்த அருமையான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அடுத்த ஆண்டு 2008ல் ஐபிஎல் தொடரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இன்று வரையில் மிக வெற்றிகரமான டி20 லீக் ஆக அது இருந்து வருகிறது.
2008 ஆம் ஆண்டு மொத்தம் 8 அணிகளுக்கு 5 மார்க்யூ பிளேயர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டார்கள். அதாவது இந்த ஐந்து பேரும் ஏலத்திற்கு வர மாட்டார்கள். இவர்களை ஒரு அணி முதலிலேயே வாங்கிக் கொள்ளும். உதாரணமாக சச்சின், டிராவிட், கங்குலி மூவரையும் மும்பை, பெங்களூரு, கொல்கத்தா அணிகள் வாங்கி வைத்திருந்தனர்.
இதில் ஒரு மிகப்பெரிய ஆச்சரியமாக 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி மார்க்யூ பிளேயராக அப்பொழுது இல்லை. அவர் ஏலத்தில் வந்துதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் மும்பை இந்தியன்ஸ் அணி உடன் போட்டியிட்டு வாங்கப்பட்டார்.
தற்பொழுது ஏன் தான் மார்க்யூ பிளேயராக இல்லை என்பது குறித்தான காரணத்தை தோனி கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் பொழுது “ஐபிஎல் தொடரில் ஒரு அணி என்னை மார்க்யூ பிளேயர் ஆக இருக்க கேட்டது. அந்த நேரத்தில் நான் விரைவான முடிவு எடுக்க வேண்டி இருந்தது. 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற இந்திய கேப்டன் நான். எனவே நான் ஏலத்திற்கு சென்றால் ஒரு மில்லியன் டாலருக்கு சுலபமாக செல்வேன் என்று நினைத்தேன்.
இதையும் படிங்க : “என் பையனோட இந்த வளர்ச்சிக்கு.. இவர் ஒருத்தர்தான் காரணம்” – ஜெய்ஸ்வால் தந்தை உருக்கமான பேட்டி
இதன் காரணமாக நான் ரிஸ்க் எடுக்க விரும்பினேன். எப்படியும் மார்க்யூ ப்ளேயர் இல்லாத மூன்று அணிகளும் எனக்காக ஏலத்தில் மோதினால், எனக்கு நல்ல தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்தேன். இதன்படியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை 6 கோடி ரூபாய்க்கு அப்பொழுது வாங்கியது. இப்படித்தான் நான் அதிகப் பணத்திற்கு ஏளத்திற்கு வந்தேன்” எனக் கூறியிருக்கிறார்.