“இஷானை கவனிச்சுக்க சொல்லி என்கிட்ட தோனி எப்பவோ சொல்லிட்டார்” – சுரேஷ் ரெய்னா வெளியிட்ட ஆச்சரியமான தகவல்!

0
607
Raina

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் ஆசியக்கோப்பையின் போது காயமடைந்து இருந்தார்கள். இதனால் அவர்கள் ஆசியக்கோப்பை இந்திய அணியில் அப்பொழுது இடம்பெறவில்லை.

இந்த நிலையில் அடுத்து நடக்க இருந்த டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து, இந்திய அணி வீரர்களின் திறமையை நம்பி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் மிகத் தைரியமான பரிசோதனை முயற்சிகளை செய்தார்கள்.

- Advertisement -

ஆனால் அப்பொழுது அவர்கள் செய்த எல்லா பரிசோதனை முயற்சிகளுக்கும் முடிவு தவறாகவே வந்தது. அந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி தோற்று முதல் சுற்றோடு வெளியேறியது. இது அப்பொழுது பெரிய விமர்சனங்களை உருவாக்கியது.

இந்த நிலையில் தற்போது இந்திய அணிக்கு நிறைய நெருக்கடியான சூழல்கள் வந்தது, ஆனால் அந்த நேரத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் எல்லாமே இந்திய அணிக்கு நல்ல முடிவுகளை கொடுத்திருக்கிறது. குறிப்பாக இஷான் கிசானை கே.எல்.ராகுலுக்கு பதிலாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் அனுப்பியது கைமேல் பலன் தந்தது. தற்பொழுது இது இந்திய அணிக்கு மிகப்பெரிய அனுகூலமான விஷயமாக மாறி இருக்கிறது. ஏனென்றால் அவர் இடது கை பேட்ஸ்மேன். மேலும் மிடில் வரிசையில் விளையாடி ரன் எடுத்திருக்கிறார் என்பது!

இந்த நிலையில் குஜராத் லயன்ஸ் அணியில் 6, 7 வருடங்களுக்கு முன்பாக இஷான் கிஷான் இடம் பெற்று இருந்த பொழுது, அந்த அணிக்கு கேப்டனாக இருந்த சுரேஷ் ரெய்னாவிடம் மகேந்திர சிங் தோனி இஷான் கிசான் கவனித்துக் கொள்ள சொல்லி கூறி இருந்ததாக, தற்பொழுது சுரேஷ் ரெய்னா ஆச்சரியமான தகவலை கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது ” இஷான் கிஷான் எப்பொழுதும் பாசிட்டிவாக அணிக்குள் நல்ல சூழலை பராமரிக்க கூடிய வீரர். எனவே அவர் ஓபன் செய்ய வேண்டும் என்று நான் எப்பொழுதும் கூறுவேன். அந்த நாட்களில் அவர் மிகவும் கடினமாக உழைத்தார். அவர் ராஞ்சியை சேர்ந்தவர் என்பதால், தோனியிடம் நிறைய பேசினார். எல்லோருக்குமே தோனியிடம் பேசப் பிடிக்கும்.

ஜார்க்கண்ட் அணிக்கு மகேந்திர சிங் தோனியை போலவே இசான் கிஷானும் பங்களித்த விதத்தின் காரணமாக, இஷான் கிஷான் விக்கெட் கீப்பிங் தொடர்பாக என்னை கவனித்துக் கொள்ளச் சொல்லி மகேந்திர சிங் தோனி என்னிடம் கூறினார்.

எனவே அப்போது எங்களுடைய குஜராத் லயன்ஸ் அணியில் டுவைன் ஸ்மித் அல்லது பிரண்டன் மெக்கலம் யாராவது விளையாடவில்லை என்றால், இஷான் கிஷான் ஓபன் செய்ய வேண்டும். நான் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும். பிறகு மீதமுள்ள பேட்டிங் வரிசையை அப்பொழுது தீர்மானித்துக் கொள்ளலாம் என்று நான் பின்ச் இடம் சொன்னேன்.

ஒரு போட்டியில் எனக்கு நினைவிருக்கிறது, அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நான்கைந்து சிக்ஸர்கள் அடித்தார். மேலும் அவர் களத்தில் எப்படி இருக்கிறார் என்பதுதான் முக்கியம். அவர் ரிஷப் பண்ட்டை போலவே சிரித்துக்கொண்டே அணியை அழகாக ஒருங்கிணைப்பார்!” இது மிக முக்கியமானது என்று கூறியிருக்கிறார்!