வீடியோ: ரசிகர்களுக்கு தல தோனி சொன்ன குட் நியூஸ் !

0
1640

பதினாறாவது ஐபிஎல் தொடரின் நாற்பத்தி ஐந்தாவது போட்டி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தொடங்க இருக்கிறது . இந்தப் போட்டியில் புள்ளிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் லக்னோ அணி நான்காவது இடத்தில் இருக்கும் சென்னை அணியுடன் மோதுகிறது .

இதற்கு முன்பு விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே லக்னோ மற்றும் சென்னை அணிகள் தோல்வியை சந்தித்து இருக்கின்றன . பரபரப்பான போட்டியில் சென்னை பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது . லக்னோ அணியும் பெங்களூர் அணியுடன் 126 ரன்களை எடுக்க முடியாமல் 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது .

- Advertisement -

இரண்டு அணிகளுமே இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால் இந்த ஆட்டம் பரபரப்பாக இருக்கும் . லக்னோ நகரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மூன்று முப்பது மணிக்கு தூங்கி இருக்க வேண்டிய இந்த போட்டி சற்று தாமதமாக 3:50 மணிக்கு துவங்கியது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி இந்த வருட ஐபிஎல் தொடருடன் உயிர் பெற்று விடுவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே பரவலான ஒரு கருத்து நிலவி வருகிறது . அதன் காரணமாகவே சென்னை அணி விளையாடும் இடம் எல்லாம் ரசிகர்கள் தோனிக்கு பிரியாவிடை கொடுப்பதற்காக படையெடுத்து வருகின்றனர் என்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது . இந்நிலையில் தனது ஓய்வு குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார் எம் எஸ் தோனி .

போட்டிக்கு முன்பாக டாஸ் நிகழ்வின்போது டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பந்து வீச தேர்வு செய்தார். அப்போது பேசிய அவர் ” ஆடுகளத்தில் ஈரத்தன்மை இருக்கிறது மேலும் ஆடுகளம் இரண்டு நாட்கள் மூடி வைக்கப்பட்டிருப்பதால் பந்து வீச்சை தேர்வு செய்ததாக தெரிவித்தார்.. ஒவ்வொரு போட்டியின் போதும் ஆடுகளத்தின் தன்மை மற்றும் போட்டி நடைபெறும் மைதானங்களை பற்றி தெரிந்திருப்பது அவசியம் எனக் கூறினார் . இந்தப் போட்டியில் ஆகாஷ் சிங் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தீபக் சஹார் அணியில் இடம் பெறுவார் எனவும் தெரிவித்தார் .தோனியை பேட்டி எடுத்த டேனி மோரிசன் “உங்களது கிரிக்கெட் வாழ்வின் இறுதிக் கட்டத்தை மகிழ்ச்சியுடன் ரசிக்கின்றீர்களா”? என்று கேட்டார், அதற்கு பதில் அளித்த எம்.எஸ் தோனி ” இதுதான் எனது இறுதி ஐபிஎல் என்று நான் சொல்லவில்லை நீங்கள் தான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என புன்னகைத்தார்”. இதன் மூலம் தோனி மீண்டும் ஒரு ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று அவரது ரசிகர்களுக்கு இதன் மூலம் தெரிவித்திருக்கிறார்

- Advertisement -

இதனைத் தொடர்ந்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் க்ருநாள் பாண்டியா ” நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய நினைத்திருந்தோம் . எங்களுக்கு அந்த வாய்ப்பே கிடைத்திருக்கிறது அதனை சரியாக பயன்படுத்திக் கொள்வோம் . கே எல் ராகுல் ஒரு கிளாஸ் கிரிக்கெட்டர் . அவர் இந்த போட்டியில் பங்கேற்காதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு . நேர்மறையான சிந்தனையுடன் விளையாடி இந்தப் போட்டியில் வெற்றி பெற முயற்சி செய்வோம் . மணான் மற்றும் கரண் ஆகியோர் அணியில் இடம்பெறுகிறார்கள் என தெரிவித்தார்