பார்டியில் ஆட்டம் போட்ட தோனி, ஹர்திக்.. நெட்டிசன்களை கவர்ந்த வீடியோ

0
241

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் ஹர்திக் பாண்டியாவும் நல்ல நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். அண்மையில் இது குறித்து பேசிய அஸ்வின் கூட, தோனியிடம் ஹர்திக் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறார். இருவரும் நிறைய விடுமுறைகளுக்கு சென்றிருக்கிறார்கள். பத்திரிக்கையாளர்களை எப்படி சமாளிப்பது என்பது தோனியிடம் கைவந்த கலை.

- Advertisement -

அதனை அவரிடம் ஹர்திக் கற்று கொண்டு விட்டதாக அஸ்வின் கூறினார்.அந்த அளவுக்கு இருவரும் நண்பர்களாக திகழ்கின்றனர். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தமக்கு பிடித்த வேலையை செய்து பொழுதை கழிக்கிறார். சமீபத்தில் ராஞ்சி டென்னிஸ் போட்டியில் பங்கேற்று தோனி கலக்கினார்.தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று அதிக அளவில் பகிரப்பட்டு வந்தது.

இதில் கிரிக்கெட் வீரர்கள் தோனி, ஹர்திக் பாண்டியா, குர்ணல் பாண்டியா, பிரபல பாப் பாடகர் பாதுஷாவுடன் ஆட்டம் பாட்டம் என கொண்டாடுகிறார்கள். இதில் தோனியும் ஹர்திக்கும் இணைந்து பாடிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இதேபோன்று குர்னல் பாண்டியா, இஷான் கிஷனும் இந்த வீடியோவில் இருக்கிறார்கள்.

இந்த வீடியோ துபாயில் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நியூசிலாந்து தொடரில் முடிந்தவுடன் நாடு திரும்பிய ஹர்திக் , தற்போது தோனியுடன் இணைந்து துபாயில் சுற்றுப்பயணம் கொண்டிருக்கிறார். இதேபோன்று ராஞ்சியில் அண்மையில் ருத்ராஜ், கேதர் ஜாதவ் ஆகியோரை வைத்து தனது புதிய காரில் தோனி பயணம் செய்து தன்னுடைய பண்ணை வீட்டை சுற்றிக் காண்பித்த புகைப்படம் அண்மையின் வெளியானது. தோனி எதற்காக துபாய் சென்றார் என்ற காரணமும் தெரியவில்லை. ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் வரும் டிசம்பரில் தொடங்குகிறது. இதனால் ஐபிஎல் போட்டிக்காக இனி தோனி படு பிஸியாக இருப்பார் என்பதால் அதற்கு முன்பே ஒரு குட்டி பிரேக் எடுத்து சக வீரர்களுடன் வெளிநாடு சென்று பொழுதை களிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -