இன்று தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடருக்கு மெகா ஏலம் நடைபெற்றது. இதில் பிளம்பிங்மிடம் மோதி வரலாற்று விலைக்கு டிவால்ட் பிரிவிஸை சவுரவ் கங்குலி வாங்கினார்.
தற்போது சவுரவ் கங்குலி தென் ஆப்பிரிக்கா டி20 லீக் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கிறார். இந்த நிலையில் முதல் மெகா ஏலத்தில் கலந்து கொண்ட அவர் திட்டமிட்டு அசத்தியிருக்கிறார்.
பிளம்மிங் சங்கக்கரா மோதல்
இன்று நடைபெற்ற மெகா ஏலத்தில் டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி இந்திய மதிப்பில் 6.68 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதுவே தென் ஆப்பிரிக்கா டி20 மெகா ஏலத்தில் மிக அதிகபட்ச தொகையாக பதிவாகியது. எனவே இதை யாரும் முறியடிக்க முடியாது என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் டிவால்ட் பிரிவிஸ் ஏலத்திற்கு வந்தார். ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் மற்றும் பார்ல் ராயல்ஸ் தலைமை பயிற்சியாளர் குமார் சங்ககாரா இருவரும் அவருக்காக கடுமையான மோதலை ஏலத்தில் வெளிப்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து சூப்பர் கிங்ஸ் விட்டு தராததால் சங்ககாரா ஏலத்தில் வெளியேறினார்.
கங்குலி அசத்தல் சம்பவம்
இதைத்தொடர்ந்து கங்குலி களத்தில் இறங்கினார். தொடர்ந்து அப்புறம் பிளம்மிங் முன்வைத்த தொகையை தாண்டி தாண்டி சென்று கொண்டே இருந்தார். சிஎஸ்கே அணிக்காக விளையாடும் டிவால்ட் பிரிவிஸை எப்படியாவது வாங்கி விட பிளமிங் செய்த முயற்சி கடைசியில் கைகூடாமல் போய்விட்டது.
இதையும் படிங்க : விராட் ரோஹித் கிரிக்கெட்டுக்கு திரும்புவதில் திடீர் திருப்பம்.. பிசிசிஐ அதிகாரி வெளியிட்ட தகவல்
இறுதியாக கங்குலி டிவால்ட் பிரிவிஸை இந்திய மதிப்பில் 8.31 கோடி ரூபாய்க்கு தனது பிரட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு வாங்கினார். ஐபிஎல் தொடரில் தவறவிட்ட வீரரை சவுத் ஆப்பிரிக்கா தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது. மேலும் கங்குலி தலைமை பயிற்சியாளராக களம் இறங்கிய முதல் மெகா ஏலத்திலேயே முக்கிய வீரரை தூக்கி அசத்தியிருக்கிறார்.






