விராட் ரோஹித் கிரிக்கெட்டுக்கு திரும்புவதில் திடீர் திருப்பம்.. பிசிசிஐ அதிகாரி வெளியிட்ட தகவல்

0
93
Virat

இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கிரிக்கெட்டுக்கு திரும்புவதில் தற்பொழுது பிசிசிஐ திடீர் டிவிஸ்ட் ஒன்றை வைத்து இருக்கிறது. இது சம்பந்தமாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் உண்மையை உடைத்திருக்கிறார்.

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இறுதியாக இந்திய அணிக்காக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி இருந்தார்கள். இதற்கு அடுத்து ஐபிஎல் தொடரில் விளையாடிய அவர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார்கள்.

- Advertisement -

இந்திய ஏ அணியில் இடம்

இந்த நிலையில் இந்தியா வரும் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக செப்டம்பர் 30 அக்டோபர் மூன்று மற்றும் ஐந்தாம் தேதிகளில் நடைபெற இருக்கும் ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இந்திய ஏ அணிக்காக களம் இறங்கி விளையாடி பயிற்சி பெறுவார்கள் என ஆரம்பத்தில் செய்திகள் வந்தது.

இதன் மூலம் இரு வீரர்களின் ரசிகர்களும் நிம்மதி அடைந்தார்கள். மேலும் ஆஸ்திரேலிய ஒரு நாள் கிரிக்கெட் சுற்றுப்பயணத்திலும் இருவரும் இடம் பெறுவார்கள் மேலும் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இது உறுதி கிடையாது

இந்த நிலையில் இரண்டு பெரிய வீரர்களும் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது என்பது குறித்து பிசிசிஐ தரப்பில் முக்கிய அதிகாரி ஒருவர் பேசியிருக்கிறார். அவர் கூறும்போது இரண்டு வீரர்களும் விருப்பப்பட்டால் மட்டுமே இந்திய ஏன் அணியில் விளையாடலாம் எனவும், ஆனால் கட்டாயம் அவர்கள் இந்திய ஏ அணியில் விளையாடி ஆக வேண்டியது இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : சாம்சன் இதுல கில்லை விட பெஸ்ட்.. அதனால இந்திய அணி மாட்டிட்டு முழிக்க போகுது – இந்திய முன்னாள் வீரர்

அதே சமயத்தில் இந்த இரண்டு வீரர்களும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கட்டாயம் இடம் பெறுவார்கள் எனவும், மேலும் பிசிசிஐ சம்பள ஒப்பந்தத்தில் இருக்கக்கூடிய வீரர்களுக்கு வருடம் இருமுறை உடல் தகுதி தேர்வு நடைபெறுவது வழக்கம் எனவும், மற்றபடி உடல் தகுதி தேர்வுக்கு இவர்களை நீக்குவது தொடர்பான வதந்தி செய்திகளில் உண்மை இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -