பாபர் அசாம் ரெக்கார்டை காலி செய்த டெவோன் கான்வே.. இந்திய வம்சாவளி வீரர் தனிச்சாதனை.. இங்கிலாந்து உலக கோப்பையில் பரிதாபம்!

0
379
Conway

இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் துவக்க ஆட்டத்தில் தற்போது விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை 282 ரன்களுக்கு கட்டுப்படுத்தி அசத்தியது. இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக விளையாட முற்பட்டு ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் வில் எங் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

இதற்கு அடுத்து அனுபவ வீரர் டெவோன் கான்வே உடன் இந்திய வம்சாவழி 23 வயதான இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்தார். இதற்கு அடுத்து ஆட்டத்தில் மின்னல் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டது.

ஒரு முனையில் கான்வே அதிரடியில் ஈடுபட, இன்னொரு முனையில் இளங்கன்று பயம் அறியாது என்பது போல ரச்சின் ரவீந்திர அதிரடியில் மிரட்ட ஆரம்பித்தார். சிறப்பாக விளையாடிய இருவரும் துரிதமாக அரை சதத்தை கடந்து அசத்தினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து முதலில் கான்வே 83 பந்துகளில் 13 பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் உடன் உலகக் கோப்பையில் தனது முதல் சதத்தை எட்டினார். இதற்கு அடுத்து சிறிது நேரத்தில் ரவீந்தரா 82 பந்தில் 9 பவுண்டரிகள் நான்கு சிக்ஸர்கள் உடன் தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் சர்வதேச சதத்தை எட்டி அசத்தினார். அதே சமயத்தில் இந்த ஜோடி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் கடந்தது.

இந்தச் சதத்தின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னைங்ஸ்களில் முதல் ஐந்து சதம் அடித்ததில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை கான்வே முந்தி இருக்கிறார். பாபர் 25 இன்னிங்ஸ்களில் அடித்திருக்க, கான்வே 22 இன்னிங்ஸ்களில் அடித்திருக்கிறார். 19 இன்னிங்ஸ்களில் அடித்து குயிண்டன் டி காக் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் முதலிடத்தில் இருக்கிறார்கள்.

ரச்சின் ரவீந்திர 82 பந்துகளில் சதம் அடித்ததின் மூலம் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் குறைந்த பந்துகளில் நியூசிலாந்துக்காக சதம் அடித்த வீரர் என்ற தனிச் சாதனையை படைத்திருக்கிறார். தற்போது நியூசிலாந்து அணி எளிதான வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது!