“10 கிலோ உடல் எடை போச்சு.. 2022 ரொம்ப மோசமா அமைஞ்சது” – இந்திய அணிக்கு தேர்வான தேவ்தத் படிக்கல் பேச்சு

0
607
Padikkal

தற்போது நிறைய இளம் பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்குள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு முன்பாகவே மிகப்பெரிய கவனம் எடுத்தவர் இளம் இடது கை பேட்ஸ்மேன் தேவ்தத்படிக்கல்.

முதன் முதலில் ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி, முதல் சீசனிலேயே சதம் அடித்து எல்லோர் கவனத்தையும் ஈர்த்து இருந்தார்.

- Advertisement -

மேலும் ஷிகர் தவான் தலைமையில், ட்ராவிட்டின் பகுதி நேர பயிற்சியில் 2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகள் விளையாடி இருந்தார்.

இதற்கு அடுத்து 2022 ஆம் ஆண்டு இவருக்கு ஏற்பட்ட குடல் நோய் பிரச்சனை இவரை மிகவும் பாதித்தது. அந்த ஆண்டில் திரும்பி வந்த இவருக்கு உள்நாட்டு கிரிக்கெட் புள்ளி விபரங்கள் சரியாக இல்லை. மிகவும் தடுமாற்றம் கண்டார்.

ஆனால் இந்த வருடம் அவருக்கு ரஞ்சி தொடரிலும், இந்திய ஏ அணிக்காகவும் மிகச் சிறப்பாக ஆரம்பித்திருக்கிறது. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாட்டு அணிக்கு எதிராக 151 ரன்கள் குவித்தார். மேலும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்திய ஏ அணிக்கு ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்தார்.

- Advertisement -

இதன் காரணமாக இவர் தற்பொழுது கேஎல்ராகுல் காயம் குணமடையாத காரணத்தினால், அவருடைய இடத்திற்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியில் தேர்வாகி இருக்கிறார்.

இதுகுறித்து பேசி உள்ள அவர் கூறும் பொழுது ” டெஸ்ட் அணிக்கான அழைப்பு என்பது எப்பொழுதுமே கனவுதான். இது சில ஆண்டுகளின் கடின உழைப்புக்கு கிடைத்தது. உழைப்புக்குபலன் கிடைத்ததில் நான் பெருமைப்படுகிறேன். இப்பொழுது என்னுடைய குடும்பத்தாருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

நோயிலிருந்து மீண்டு உடல் தகுதி பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. நான் 10 கிலோ உடல் எடையை இழந்திருந்தேன். இதனால் சரியாக சாப்பிட்டு தசை வலிமையை பெறுவது மிகவும் முக்கியமாக இருந்தது. எனது கேரியரில் ஒவ்வொரு போட்டியும் கணக்கிடப்படுகிறது. ஆனால்என்னால் நிறைய போட்டிகளில் விளையாட முடியவில்லை.

இதையும் படிங்க : “அகர்கர் யாரையும் விட மாட்டார்.. இவங்களை இந்திய டீம்க்கு செலக்ட் பண்ணாதிங்க” – முன்னாள் வீரர் பேட்டி

ஆனால் நான் மீண்டு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்தேன். அதில் மட்டுமே நான் கவனம் செலுத்த வேண்டியதாக இருந்தது. முடிந்தவரை பல போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என என்னுடைய சீசனை தொடங்கினேன். நான் எந்த பொசிஷனில் பேட்டிங் செய்தாலும் அந்த சவாலை விரும்புகிறேன். இது நான் மேலும் கற்றுக் கொள்வதற்கான ஒரு படி நிலையாகும்” என்று கூறியிருக்கிறார்.