“ரிஷப் பண்டிற்கு பதிலாக அண்டர்-19 வீரரை களம் இறக்கும் டெல்லி கேப்பிடல்ஸ்”- விரைவில் இணைய உள்ளதாக தகவல்!

0
492

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களின் 16வது சீசன் நாளை மறுநாள் அகமதாபாத்தில் தொடங்க இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன.

ஐபிஎல் போட்டிகளுக்காக அனைத்து அணிகளும் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு சில அணிகள் காயம் அடைந்த தங்களது அணியின் வீரர்களுக்கான மாற்று வீரர்களை தேடிக் கொண்டிருக்கின்றனர் . இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோரின் காயம் மிகவும் துரதிஷ்டவசமானது.

- Advertisement -

இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர்களில் டெல்லி அணியை டேவிட் வார்னர் வழிநடத்துவார் என அதன் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது . இந்நிலையில் அவர்கள் ரிஷப் பண்டிற்கான மாற்று வீரரை இந்த ஆண்டு தேடிக் கொண்டிருக்கின்றனர். தற்போது டெல்லி கேப்பிடல்சில் இருந்து வரும் செய்திகளின்படி அந்த அணியினர் ரிஷப் போட்டிற்கான மாற்று வீரரை தேர்வு செய்து விட்டதாகவும் அந்த வீரர் விரைவில் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றன.

2021 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் வெற்ற. பெற்ற இந்திய அணியின் விக்கெட் கீப்பர் அபிஷேக் போரல். இவர்தான் ரிஷபிற்கு பதிலாக டெல்லி அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கத்தைச் சார்ந்த விக்கெட் கீப்பரான இவர் இடது கை ஆட்டக்காரர் ஆவார்.

2022 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் தனது முதல் தர கிரிக்கெட் வால்வை தொடங்கிய இவர் பரோடா அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் ஆடினார். இதுவரை 695 ரன்கள் எடுத்திருக்கும் இவரது சராசரி 30.21.. இந்த வருட ரஞ்சி கோப்பை சீசனில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் அரை இறுதிப் போட்டியில் மத்திய பிரதேச அணிக்கு எதிராக 51 ரன்களையும் இறுதிப் போட்டியில் சௌராஷ்டிரா அணிக்கு எதிராக 50 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பயிற்சி போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பரோல் விரைவிலேயே டெல்லி கேப்பிட்டல் அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் துவக்க சில போட்டிகளில் சர்பராஸ் கான் விக்கெட் கீப்பராக செயல்படுவார் எனவும் டெல்லி தரப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி அணி தனது முதல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணியை எதிர்த்து வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி விளையாட இருக்கிறது.