பிரித்வி ஷா உள்ளூர் கிரிக்கெட்டரா?.. நியாயமே கிடையாது.. ரிக்கி பாண்டிங் பதிலால் ரசிகர்கள் கோபம்

0
165
Ponting

இன்று ஐபிஎல் தொடரில் 2 போட்டிகள் நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. மாலை நடைபெறும் இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

ரிக்கி பாண்டிங் பயிற்சியில் மற்றும் ரிஷப் பண்ட் தலைமையில் விளையாடும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தற்பொழுது 10 அணிகளில் மிகவும் பலவீனமாக இருப்பதாக கிரிக்கெட் நிபுணர்களால் பார்க்கப்படுகிறது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை சரியாக இல்லாத காரணத்தால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ரன்கள் எடுத்தாலும் கூட, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆட்டத்தை நகர்த்திச் சென்று வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டு அணிகளுக்கு எதிராக விளையாடி மிடில் வரிசை தோல்வி காரணமாகவே போட்டியையும் தோற்றார்கள்.

- Advertisement -

இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய வீரர் துவக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா களம் இறக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக வந்தார்கள். இந்த முடிவு மோசமானதாக இல்லாமல் இருவருமே நல்ல துவக்கத்தை கொடுக்க செய்கிறார்கள். அதே சமயத்தில் மிடில் ஆர்டர் பலவீனமாக இருப்பதால், பிரித்வி ஷா துவக்க ஆட்டக்காரராக வரும் பொழுது, மார்ஸ் கீழேமூன்றாவது ஆட்டக்காரராக விளையாடலாம். இதனால் அவர்களுடைய மிடில் வரிசை பலப்படும்.

தற்போது பிரித்வி ஷாவுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இடம் கேட்ட பொழுது “அவர் தன்னை தேர்வு செய்வதற்கு எங்களை தள்ளுகிறார். கடந்த இரண்டு வாரங்களாக மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். எங்களுக்கு வெளிப்படையாக முதல் ஆட்டத்தில் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் அன்றிச் நோர்க்கியா கிடைக்கவில்லை. இதன் காரணமாக நாங்கள் நான்கு வெளிநாட்டு பேட்ஸ்மேன்களுடன் சென்றோம். இதனால் அவருக்கு வாய்ப்பு தர முடியவில்லை.

நாங்கள் பிரித்வி ஷாவை பயிற்சியில் பார்ப்போம். மேலும் வலைப்பயிற்சியில் எவ்வளவு சிறப்பாக விளையாடுகிறார் என்பதையும் கவனிப்போம். பயிற்சியில் அவர் இன்று எல்லோரையும் கவர்ந்தால், நிச்சயமாக அவரை நாங்கள் தேர்வு செய்வதற்கு பரிசீலிப்போம். சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் இன்று நாங்கள் நல்ல மனநிலையுடன் இருக்கிறோம். எனவே வெற்றி பெற முடியும் என நம்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : கடைசியா கண்டுபிடிச்சிட்டாங்க.. இடி மாதிரி வேகம்.. ஜானி பேர்ஸ்டோ குதிக்கிறாரு – சேன் வாட்சன் பேட்டி

இந்திய தேசிய அணிக்கு அறிமுகமான ஆட்டத்தில் சதம் அடித்து துவக்காட்டக்காரராக விளையாடிய ஒரு வீரரை, பயிற்சியில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதைப் பார்த்து வாய்ப்பு தருவோம் என ரிக்கி பாண்டிங் கூறியிருப்பது இந்திய ரசிகர்களை கோபம் அடைய வைத்திருக்கிறது. மேலும் இந்திய முன்னாள் வீரர்களும் அவரை வெளியில் வைத்திருப்பது குறித்து தங்கள் விமர்சனங்களை ஏற்கனவே முன் வைத்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.