கடைசியா கண்டுபிடிச்சிட்டாங்க.. இடி மாதிரி வேகம்.. ஜானி பேர்ஸ்டோ குதிக்கிறாரு – சேன் வாட்சன் பேட்டி

0
484
Mayank

நேற்று ஐபிஎல் தொடரில் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் சிறப்பான நாளாக அமைந்தது. லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், லக்னோ அணிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட 21 வயதான இளம் இந்திய வலதுகை வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கிறார். அவருடைய அதிவேக பந்துவீச்சு சீக்கிரத்தில் அவரை இந்திய அணிக்குள் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 9 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. இதற்கு அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் கிங் சனி 102 ரன்கள் வரை விக்கெட் இழப்பில்லாமல் விளையாடியது. எனவே போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெறும், லக்னோ அணி தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வி அடையும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இப்படியான நேரத்தில் பந்து வீச்சுக்கு வந்த மயங்க் யாதவ் தனது அதிவேக பந்துவீச்சால் உலகத் தரம் வாய்ந்த ஜானி பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஜித்தேஷ் சர்மா என மூன்று முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றி, பஞ்சாப் அணியிடமிருந்த வெற்றியை லக்னோ அணிக்கு கைமாற்றி விட்டார். நேற்றைய போட்டியில் நான்கு ஓவர்கள் பந்துவீசி 27 ரன்கள் மட்டும் தந்து வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்ததால், அறிமுகப் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

இவரது பந்துவீச்சு குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா சேன் வாட்சன் கூறும்பொழுது “மயங்க் யாதவ். ஆஹா இப்படி ஒரு பந்து வீச்சாளரை கண்டறியதான் எல்லா அணிகளும் விரும்புகிறது. அவருடைய அதிவேக பந்துவீச்சு காரணமாக உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் குதிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஜானி பேர்ஸ்டோ அவரது பந்துவீச்சில் இரண்டு பந்துகளை எதிர்கொண்ட பிறகு, வேகத்தின் காரணமாக கிரீசில் நகர்ந்து விளையாட ஆரம்பித்து விட்டார். அது பார்க்கவே நன்றாக இருந்தது. இடி மாதிரியான பந்துவீச்சு.

நேற்றைய போட்டியில் லக்னோ ஒரு ஆல் ரவுண்டு செயல்திறனை வெளிப்படுத்தியது. நேற்று லக்னோ அணியில் முதல் பந்தில் இருந்தே இன்டென்ட்டை பார்க்க முடிந்தது. கே.எல்ராகுல் 15 ரன்களுக்கு ஆட்டம் இழந்து இருக்கலாம்.ஆனால் சந்தித்த பந்துகள் 8தான். இதுதான் நான் அவரைப் பார்க்க விரும்பும் முறை.

- Advertisement -

இதையும் படிங்க : இதுவரை எங்கப்பா ஒளிஞ்சிருந்த.. மயங்க் யாதவுக்கு அவரின் ஹீரோ டேல் ஸ்டெய்ன் போட்ட பதிவு.. நெகிழ்ச்சி சம்பவம்

அவர் தற்போது அடித்துள்ள மொத்த ரன்கள் ஆரஞ்சு தொப்பிக்கு அருகில் இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர் வருத்தப்பட கூட செய்யலாம். ஆனால் அவர்கள் ஒரு அணியாக செய்ய வேண்டியது இதைத்தான். இவர்களுக்கு பிறகு வந்த பூரன் இதைத் தொடர்ந்து செய்தார். கடைசியில் வந்த குருனால் பாண்டியாவும் இதையே செய்தார். அவர்கள் 199 என்கின்ற நல்ல ரன்னுக்கு வந்தார்கள்” என்று கூறி இருக்கிறார்.