இம்பேக்ட் பிளேயர் ரூல் தேவையா?.. ரோகித் சர்மா கருத்துக்கு ரிக்கி பாண்டிங் அதிரடி பதில்

0
29
Ponting

ஐபிஎல் தொடரில் இரண்டு வருடங்களாக இம்பேக்ட் பிளேயர் விதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு கூடுதல் பந்துவீச்சாளர் அல்லது பேட்ஸ்மேன் பிளேயிங் லெவனுக்குள் வருகிறார். ஆனால் இந்த விதியால் ஆல் ரவுண்டர்கள் தேவை குறைகிறது. இதுகுறித்து நிறைய விமர்சனங்கள் உருவாகி இருக்கின்றன. தற்போது இதற்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பதில் கூறியிருக்கிறார்.

இம்பேக்ட் பிளேயர் விதியால் ஒரு கூடுதல் வீரரை பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வர முடிகின்ற காரணத்தினால், மிக அதிகபட்சமாக பேட்டிங் நீளம் அதிகரிக்கிறது. இது போட்டிக்கு சுவாரசியத்தை கொடுப்பதை விட, போட்டிக்குள் இருந்த சவால்களை அழித்து விடுகிறது.

- Advertisement -

மேலும் அதே சமயத்தில் ஒரு பந்துவீச்சாளருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேன் இம்பேக்ட் பிளேயராக வரும் பொழுது, அந்த அணிக்கு ஒரு ஆல் ரவுண்டர் தேவை தீர்ந்து விடுகிறது.இதனால் ஐபிஎல் சந்தையில் ஆல்ரவுண்டர்களுக்கான மதிப்பு குறைந்து விடுகிறது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் இம்பேக்ட் பிளேயர் விதி இல்லாததால், ஆல்ரவுண்டர்களின் மதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறுவதால், இம்பேக்ட் பிளேயர் விதி இருப்பதால், இந்தியாவில் ஆல் ரவுண்டர்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.

இதன் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்த விதியில் தனக்கு பெரிய உடன்பாடு கிடையாது என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார். மேலும் இந்த விதியால் ஆல்ரவுண்டர்கள் உருவாவது தடுக்கப்படுகிறது என்றும், இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதில்லை என்றும் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் பேசி இருந்தார்.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “பொதுமக்கள் இந்த விதியைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இந்த விதி அவர்களுக்கு பிடித்திருக்கிறது என்றால், இதை தாராளமாக தொடரலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி சொல்ல நினைக்கும் இது கடவுளுக்கு தெரியும்.. ஜடேஜாகிட்ட எதிர்பாக்காதிங்க – இந்திய முன்னாள் வீரர் பேச்சு

இம்பேக்ட் பிளேயர் விதி சராசரியான ஒரு கிரிக்கெட் ரசிகர்களுக்கு புரியவில்லை என்றாலும், இம்பேக்ட் பிளேயர் என்றால் என்ன? யார் யாருக்கு பதிலாக உள்ளே வருகிறார்கள் வெளியே போகிறார்கள்? என்பது மாதிரியான குழப்பங்கள் நீடித்தால், இந்த விதி தானாகவே இல்லாமல் போய்விடும். மொத்தத்தில் இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறதா? என்பதை பொறுத்து தான் நிலைக்கும்” என்று கூறியிருக்கிறார்.