நான் போட்ட ஒரு தப்பு கணக்கு.. அதுதான் எங்க தோல்விக்கு காரணம் – கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டி

0
692
Rishabh

இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக தங்களது சொந்த மைதானத்திற்கு திரும்பியது. ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஒரு மோசமான தோல்வியை பெற்றிருக்கிறது. இந்த தோல்விக்குப் பிறகு டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் அதிரடியாக விளையாடி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு, டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை கொடுத்தார். இதை பயன்படுத்திக் கொண்ட அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் முப்பத்தி எட்டு பந்தில் 131 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டி விட்டார்கள்.

- Advertisement -

மேலும் அந்த அணிக்கு கடைசி கட்டத்தில் நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஷாபாஷ் அகமத் 47 பந்தில் 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இதன் காரணமாக அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 300 ரன்கள் அடிக்கும் என்கின்ற நிலையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. குல்தீப் யாதவ் இடையில் நான்கு விக்கெட் கைப்பற்ற, அந்த அணியின் ரன் வேகம் தடைப்பட்டது.

தொடர்ந்து விளையாடிய டெல்லி அணிக்கு ஜாக் பிரேசர் மெக்கர்க் வெறும் 18 பந்தில் 61 ரன்கள் குவித்தார். கடைசியில் கேப்டன் ரிஷப் பண்ட் போராடி 35 பந்தில் 44 ரன்கள் எடுத்தார். 19.1 ஓவரில் டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் ஐந்து வெற்றிகள் உடன் இரண்டாவது இடத்தை பிடித்தது.

தோல்விக்குப் பின் பேசிய டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் “நான் டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு எடுத்ததற்கு முக்கிய காரணம், ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவு வரும் என்று நினைத்தேன். ஆனால் நாங்கள் பேட்டிங் செய்யும்பொழுது பனி வரவில்லை. நாங்கள் அவர்களை 220 முதல் 230 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருந்தால், வெற்றிபெற வாய்ப்பு இருந்திருக்கும். அதே சமயத்தில் நாங்கள் பேட்டிங் செய்யும்பொழுது பந்து நாங்கள் எதிர்பார்த்ததை விட நின்று வந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : 465 ரன்.. டெல்லி அணியை வீழ்த்தியது ஹைதராபாத்.. புள்ளி பட்டியலில் சிஎஸ்கே-க்கு சரிவு

260 முதல் 270 ரண்களை சேஸ் செய்யும் பொழுது, நீங்கள் எல்லா நேரமும் அடித்து விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த போட்டியின் தோல்விக்கு பிறகு சிந்தனைச் செயல்முறையில் நாங்கள் மீண்டும் சிறப்பாக திரும்பி வருவோம் என்று நினைக்கிறேன். பிரேசர் பேட்டிங் மிக நன்றாக இருந்தது. அவரைப்போல ஒருவர்தான் எங்களுக்கு தேவை. அவர் செய்ததை அணியாக நாங்கள் சேர்ந்து செய்ய வேண்டும். அடுத்த ஆட்டத்தில் நாங்கள் முன்னேற வேண்டிய பகுதிகளை பார்த்து சரி செய்து திரும்பி வருவோம்” என்று கூறியிருக்கிறார்.