“குஜராத் அணிக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்த டெல்லி” – பரபரப்பான போட்டியில் பந்துவீச்சாளர்கள் அசத்தல்!

0
1475

இந்திய பிரமிடு கிரிக்கெட் தொடரின் 2023 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன இன்றைய போட்டியில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் மோதின . இந்த போட்டி அகமதாபாத்தில் வைத்து நடைபெற்றது .

முதலில் ஆடிய டெல்லி அணி குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சால் 20 ஓவர்களில் 130 ரன்கள் மட்டுமே எடுத்து எட்டு விக்கெட்டுகளை இழந்தது . அந்த அணியின் அம்மான் கான் அபாரமாக ஆடி 44 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார் இதில் மூன்று சிக்ஸர்களும் மூன்று பவுண்டர்களும் அடங்கும் . இவருக்கு உறுதுணையாக அக்சர் பட்டேல் 27 ரன்களும் ரிபல் பட்டேல் 23 ரண்களும் எடுத்தனர் .

- Advertisement -

குஜராத் அணியின் பந்து வீட்டில் முகமது சமி மிகச் சிறப்பாக பந்து வீசி 11 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார் . மேலும் மோகித் சர்மா இரண்டு விக்கெட்டுகளையும் ரஷித் கான் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 131 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி குஜராத்த அணிக்கு அழுத்தத்தை கொடுத்தனர் .

அந்த அணியின் துவக்க வீரர் சாகா ரன் எதுவும் எடுக்காமல் கலில் அகமத் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார் குஜராத் அணிக்காக இந்த தொடரில் சிறப்பாக ஆடிவந்த சுப்மண் கில் 6 ரண்களிலும் கடந்த போட்டியில் அரை சதம் எடுத்த விஜய் சங்கர் 6 ரணகளிலும் டேவிட் மில்லர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர் .

கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் அபினவ் மனோகர் ஆகியோர் 62 ரன்கள் பார்ட்னர்ஷிப்பின் மூலம் குஜராத் அணியை தடுமாற்றத்தில் இருந்து மீட்டனர் . ஆனாலும் டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சால் குஜராத் அணியால் வேகமாக ரன்களை எடுக்க முடியவில்லை . 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அபினவ் மனோகர் ஆட்டம் இழந்தார் .

- Advertisement -

இரண்டு ஓவர்களுக்கு 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்திற்கு வந்தார் குஜராத் அணியின் பினிஷர் ராகுல் தேவாட்டியா தனது வழக்கமான அதிரடியின் மூலம் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் . ஒன்பது பந்துகளுக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மூன்று பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டி ஆர் பந்துகளுக்கு 12 ரன்கள் எடுத்தால் போதுமானது என்ற நிலைக்கு மாற்றினார் .

இறுதி ஓவரில் ஆறு பந்துகளுக்கு 12 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணியின் அனுபவ பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி ஆறு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து தேவாட்டியா விக்கெட்டை வீழ்த்தினார். இறுதிப் பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரஷித் கான் ஒரு ரன் மட்டுமே அடிக்க முடிந்தது . இதன் மூலம் இந்தப் போட்டியில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தனது மூன்றாவது வெற்றியை பெற்றிருக்கிறது . இந்த வெற்றியின் மூலம் அவர்கள் தங்களது பிளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். டெல்லி அணிக்காக இஷாந்த் இரண்டு விக்கெட்டுகளையும் கலில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் குல்திப் யாதவ் மற்றும் நோர்கியா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் . இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணிக்கு எதிராக தங்களது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது டெல்லி கேப்பிட்டல்