“தீபக் சகரா? முகமது சிராஜா?.. யாருக்கு வாய்ப்பு தர வேண்டும்?” – இர்பான் பதான் வெளிப்படையான பதில்!

0
300
Siraj

தற்பொழுது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா நாட்டுக்கு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்திய அணியின் இந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில், முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், சூரியகுமார் தலைமையில் நாளை மறுநாள் பத்தாம் தேதி விளையாடுகிறது.

- Advertisement -

அறிவிக்கப்பட்டுள்ள இந்த டி20 அணியில் வேகப்பந்துவீச்சாளர்களாக முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சகர் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகிய நான்கு வேகப்பந்து பேச்சாளர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.

டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து பேச்சாளர் பும்ரா திரும்புவது உறுதி. தற்பொழுது இவருடன் சேர்ந்து வேகபந்துவீச்சுப்படையில் இணையக்கூடிய இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் யார் என்பதற்கான தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தற்பொழுது இதற்காக இந்த நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் பரிசோதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான், இந்த நால்வரில் முதலில் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது சரியாக இருக்கும் என்பது குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “போட்டியில் விளையாட உங்களிடம் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்க வேண்டும். அர்ஸ்தீப் நிச்சயம் இருப்பார். அதேபோல் முகேஷ் குமாரும் நிச்சயமாக இருப்பார். தற்பொழுது தீபக் சகர் மற்றும் முகமது சிராஜ் இருவரில் யார் முதலில் விளையாட வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்.

முகமது சிராஜ் தற்பொழுது மிகச் சிறப்பான பந்துவீச்சு ஃபார்மில் இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அவரால் புதிய பந்தில் சிறப்பாக இரண்டு ஓவர்களை வீச முடியும். மேலும் கடைசி கட்டத்தில் சில யார்க்கரை வீச முடியும்.

தற்பொழுது தீபக் சகர் காயத்தில் இருந்து திரும்ப வருகிறார். நீங்கள் முன்னோக்கி செல்லும் பொழுது பிட்டான வீரர்கள் உங்களுக்கு தேவை. அவர்கள் நீண்ட காலம் அணியில் இருக்க வேண்டும். எனவே தீபக் சகரை விட முகமது சிராஜ்க்கு வாய்ப்பு தர வேண்டும். தீபக் சகரை தவிர்த்த மூன்று பேரும் முதலில் விளையாட வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!