கோலியை வம்பிழுத்த SA கேப்டன்.. அஸ்வின் பெயரை சொல்லி வாயடைக்க வைத்த கிங்.. நடந்தது என்ன.!

0
20868

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுமோசமாக பேட்டிங் செய்தது. இந்த டெஸ்ட் போட்டியில் யார் மோசமாக பேட்டிங் செய்கிறார்கள் என்பதில் இரு அணிகளுக்கும் கடும் போட்டி ஏற்பட்டது.

முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்க அணி 55 ரன்கள் ஆட்டம் இழக்க இந்திய அணி 153 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குறிப்பாக 153 ரன்களுக்கு நான்கு விக்கெட் இழ்ந்தபோது இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டங்கள் இழந்ததால் பூஜ்ஜியம் ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி 46 ரன்கள் எடுத்திருந்தார்.விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது மார்க்கரம் வீசிய ஒரு பந்து விராட் கோலி காலில் பட்டது. இதற்கு தென்னாபிரிக்கா வீரர்கள் அவுட் கேட்க நடுவர் மறுத்துவிட்டார்.

இதை எடுத்து டிஆர்எஸ் முடிவை பயன்படுத்தி அவுட்டா இல்லையா என பார்த்தபோது ஆடுகளத்தின் பவுன்ஸ் அதிகமாக இருந்ததால் வந்து ஸ்டெம்பை அடிக்காது என்று டி ஆர் எஸ் கணிக்கப்பட்டது.இதனை அடுத்து விராட் கோலி இடம் சென்று தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் ஏல்கர் இம்முறை நீங்கள் தப்பித்து விட்டீர்கள் என்று கூறி கிண்டல் அடித்தார்.

எதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விராட் கோலி அஸ்வின் வீசியபோது உங்கள் காலில் அடித்ததை விட தற்போது எனக்கு அதிகமாக தான் பட்டது என்று விராட் கோலி கூறினார். இதனை அடுத்து இருவருமே சிரித்துக் கொண்டு சென்றனர்.

- Advertisement -

அதாவது 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி ஒன்றில் அஸ்வின் பந்து வீசினார். அப்போது அது டீன் எல்காரின் காலில் பட்டது. இதற்கு இந்திய வீரர்கள் டி ஆர் எஸ் கேட்டனர். அப்போது பந்து ஸ்டெம்புக்கு மேல் சென்றது போல் கிராபிக்ஸில் காட்டப்பட்டது.

இதனை பார்த்து இந்திய வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் பந்து அந்த அளவுக்கு பவுன்சே ஆகிருக்காது என்றும் தென்னாப்பிரிக்கா ஏமாற்றிவிட்டதாகவும் இந்திய வீரர்கள் ஸ்டெம்ப் மைக்கில் சென்று கடுமையாக திட்டினர். இந்த சம்பவத்தை தான் தற்போது விராட் கோலி நினைவுப்படுத்தி டீன் எல்காரிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.