வீடியோ.. கடைசி டெஸ்ட்.. மறைந்த பிலிப் ஹியூஸ்காக டேவிட் வார்னர் செய்த விஷயம்.. நெகழ்ச்சியில் ரசிகர்கள்

0
1144

ஆஸ்திரேலியா அணிக்காக 3 வடிவங்களிலும் அதிரடியாக தொடக்கம் கொடுத்து வருபவர் டேவிட் வார்னர். அண்மையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர், இன்று தனது கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். சொந்த மைதானமான சிட்னி மைதானத்தில் டேவிட் வார்னர் கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கினார்.

இதில் முதல் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி தடுமாறிய நிலையில், ரிஸ்வான் மற்றும் சல்மான் ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி மீண்டெழுந்தது. சிறப்பாக ஆடிய ரிஸ்வான் 88 ரன்கள் எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் மறுமுனையில் நின்ற சல்மான் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 227 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.

- Advertisement -

இதன்பின் பாகிஸ்தான் அணியின் பவுலிங் ஆல்ரவுண்டரான ஆமிர் ஜமால் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசி பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். அதிரடியாக ஆடிய அவர், அரைசதம் கடக்க, பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 300 ரன்களை கடந்து சென்றது. பின்னர் 82 ரன்கள் எடுத்து ஜமால் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 313 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இதன்பின் ஆஸ்திரேலியா அணி தரப்பில் டேவிட் வார்னர் – உஸ்மான் கவாஜா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சிட்னி மைதானத்தில் கடைசி முறையாக டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்குவதால் அவரின் வருகை ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த போட்டியில் களமிறங்குவதற்காக டேவிட் வார்னரும் ஆர்வமாக இருந்தார். அவரும் உஸ்மான் கவாஜாவும் களமிறங்கிய போது, சிட்னி மைதான ஓய்வறையில் மறைந்த ஆஸ்திரேலியா வீரர் பில் ஹியூஸ் முகத்தை செதுக்கி வைத்துள்ள இடத்தில் கைகளை வைத்து மரியாதை செலுத்திவிட்டு களமிறங்கினார்.

- Advertisement -

சிட்னி மைதானத்தில் டேவிட் வார்னர் எப்போது களமிறங்கினாலும் பில்-க்கு மரியாதை செய்வது வழக்கம். கடைசி முறையாக வார்னர் மரியாதை செய்தது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் அனைத்து ரசிகர்களும் எழுந்து நிற்க, கவாஜாவை கட்டியணைத்து விட்டு களத்திற்குள் புகுந்தார்.

அப்போது ஆச்சரியமளிக்கும் வகையில் பாகிஸ்தான் அணி வீரர்கள் அனைவரும் அணிவகுத்து நின்று டேவிட் வார்னருக்கு கார்ட் ஆஃப் ஜானர் மரியாதையை அளித்தனர். ஜாம்பவான் வீரர்களுக்கு எதிரணிகளால் கார்ட் ஆஃப் ஹானர் விருது அளிக்கப்படுவது வழக்கம். பாகிஸ்தான் அணி தரப்பில் டேவிட் வார்னருக்கு இவ்வகையிலான மரியாதை அளிக்கப்பட்டது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வார்னர் 6 ரன்களுடன் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது