அனுபவ ஆஸி அணியை.. ஒரு சிறுவன் வழிநடத்த கூடாது.. சீனியர் பிளேயர்ஸ் இதை செய்யணும் – டேவிட் வார்னர் விமர்சனம்

0
3035

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி தற்போது 2-1என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்ற போதிலும் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் வரிசையை விமர்சித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 19 வயது தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் நான்காவது போட்டியில் முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்றார். தனது அறிமுகப் போட்டியிலேயே உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இருக்கும் பும்ராவை முதல் ஸ்பெல்லிலேயே அதிரடியாக விளையாடி அவரது லைன் அண்ட் லென்த்தை தொந்தரவு செய்தார்.

பும்ராவின் ஒரு ஓவரில் 19 ரன்கள் குவித்து தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடும் பாணியை ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்படுத்தினார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் தனது அதிரடியை தொடர முடியாமல் வெறும் 8 ரன்னில் பும்ராவின் பந்து வீச்சிலேயே போல்ட் ஆகி வெளியேறினார். இந்த சூழ்நிலையில் அனுபவமான ஆஸ்திரேலியா பேட்டிங் வரிசையை ஒரு சிறுவன் வழி நடத்துவது போல இருக்கக் கூடாது என்று முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

அனுபவமான வீரர்களே இதை செய்ய வேண்டும்

இதுகுறித்து வார்னர் விரிவாக கூறும்போது “சாம் முதல் வரிசையில் தைரியமாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அதே ஆஸ்திரேலியா அணியில் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவமான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களும் தைரியமான அணுகுமுறையை வெளிப்படுத்தி இருக்கலாம். அவர்கள் வெவ்வேறு ஷாட்களை விளையாடி இருக்கலாம். மேலும் தங்களது க்ரீசை விட்டு வெளியே வந்து வித்தியாசமாக பேட்டிங் செய்திருக்கலாம்.

இதையும் படிங்க:இனி விராட் ரோஹித் இத மட்டும் செஞ்சா போதும்.. முடிஞ்சத பேசி பிரயோஜனம் இல்ல – சுனில் கவாஸ்கர் பேட்டி

இதில் ஸ்டீவ் ஸ்மித் ஒரு வித்தியாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இந்த மாதிரியான அணுகுமுறையை அனுபவ வீரர்கள் வெளிப்படுத்த வேண்டுமே தவிர வேறு யாரோ ஒருவர் வந்து வேகத்தை மாற்றக்கூடாது. ஆஸ்திரேலியா அணியில் டாப் ஆர்டரிலும் மற்றும் முழுமையான பேட்டிங் வரிசையிலும் அனுபவமான வீரர்கள் அணியில் இருக்கிறார்கள்” என்று டேவிட் வார்னர் கூறியிருக்கிறார். டேவிட் வார்னர் கூறியதைப் போல கவாஜா மார்ஸ், லபுஷேன் போன்ற அனுபவமான வீரர்கள் அணியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -