இனி விராட் ரோஹித் இத மட்டும் செஞ்சா போதும்.. முடிஞ்சத பேசி பிரயோஜனம் இல்ல – சுனில் கவாஸ்கர் பேட்டி

0
99

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெரிய அளவில் இழந்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பாகவே நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி பெரிய ஏமாற்றத்தை சந்தித்தது. இருப்பினும் ஆஸ்திரேலியாவில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்றோர் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றிகளை தேடி தருவார்கள் என்று அனைவரும் நம்பினார்கள். ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களது செயல்பாடு அமையவில்லை.

இதுவரை நடைபெற்ற முடிந்துள்ள நான்கு போட்டிகளிலும் விராட் கோலி ஒரு இன்னிங்ஸில் மட்டுமே சதம் அடித்திருக்கும் நிலையில் மற்ற அனைத்து இன்னிங்ஸ்களிலும் மோசமாகவே விளையாடியிருக்கிறார். அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா தான் களம் இறங்கிய இரண்டாவது போட்டி முதல் மிகவும் மோசமான பங்களிப்பை வெளிப்படுத்தி இந்திய அணியின் தோல்விக்கு இந்த இருவரும் முக்கிய பங்காற்றி இருக்கின்றனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இந்திய அணி பெரிய அளவில் நம்பி இருக்கும் நிலையில் இவர்களின் ஆட்டம் இந்திய அணிக்கு பிரச்சினையாக அமைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த இருவர் குறித்து சுனில் கவாஸ்கர் சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

சரியான நேரத்தில் செயல்படுத்த தவறினர்

இது குறித்து அவர் கூறும் போது “இது உண்மையில் தேர்வாளர்களை பொறுத்தது. நான் கிரிஸ்டல் பந்தை படிப்பவன் அல்ல. ஏனென்றால் இந்திய கிரிக்கெட்டை பொருத்தவரை கிரிஸ்டல் பந்தை யாரும் படிக்க முடியாது.( கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலத்தை கணிப்பது) இது ஒரு நிச்சயமான உண்மை. ஆனால் இந்திய அணி என்ன எதிர்பார்த்ததோ அதற்கான உதவிகள் வரவில்லை. இந்திய அணியில் கீழ் வரிசை பேட்டிங் பிரச்சனை இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் டாப் ஆர்டர் வீரர்களின் பங்களிப்பு மோசமாக இருக்கிறது. அதாவது இந்திய அணியில் சீனியர் வீரர்கள் அணிக்கு தேவையான நேரத்தில் சரியான பங்களிப்பை வழங்கவில்லை.

இதையும் படிங்க:இந்திய டெஸ்ட் தொடர்.. ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை முறியடித்த நாதன் லயன்.. டெஸ்டில் சிறப்பான சாதனை.. முழு விவரம்

இனி அவர்கள் செய்ய வேண்டியது சிட்னி டெஸ்ட் போட்டியில் போராட வேண்டியது மட்டுமே பாக்கி உள்ளது. அதை மட்டும் அவர்கள் சரியாக செய்ய வேண்டும்” என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். இந்திய அணி இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழக்காமல் இருக்க அடுத்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டியது அவசியமாகிறது. ஏற்கனவே இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் டெஸ்ட் தொடரை இழக்காமல் இருப்பதற்கு உதவும்.

- Advertisement -