டேவிட் வார்னர் விலகல்.. ஆஸி நிர்வாகம் எடுத்த முடிவு.. உஸ்மான் கவாஜா மட்டும் ஆதரவு

0
5665

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தொடர்ந்து மூன்று இன்னிங்ஸ்லாக பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஏமாற்றி வருகிறார். நாக்பூர் டெஸ்டில் மொத்தமாகவே அவர் 11 ரன்கள் தான் எடுத்தார். இந்த நிலையில் டெல்லி டெஸ்ட் முதல் நாளில் டேவிட் வார்னர் முதல் ரன்னை எடுக்க 21 பந்துகள் தேவைப்பட்டது. எனினும் வார்னர் 15 ரன்கள் மட்டுமே சேர்த்து மீண்டும் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இதனால் வார்னரை  அணியை விட்டு நீக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி தந்துள்ள சக தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, அஸ்வினுக்கு எதிராக வார்னர் முதல் டெஸ்டில் அதிரடி காட்டினார். இரண்டு பவுண்டரிகளை அடித்த பிறகு தான் அவர் எல்பிடபிள்யூ ஆனார். தொடக்க வீரராக களம் இறங்கி இந்த ஆடுகளங்களில் விளையாடுவது மிகவும் கடினமாக இருக்கிறது. நான் இன்று ரன் அடித்தது எனக்கு இருந்த அதிர்ஷ்டம் காரணமாக தான்.

ஆனால் சிலருக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்காது. நிச்சயம் கடினமான சூழல் இருக்கிறது. இதனால் வெறும் மூன்று இன்னிங்ஸ் வைத்து டேவிட் வார்னர் குறித்து எந்த முடிவையும் எடுத்து விடாதீர்கள். இன்னும் இந்த டெஸ்ட் தொடரில் நிறைய  இன்னிங்ஸில் இருக்கிறது. இதில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். வார்னர் ஒரு சிறந்த வீரராக விளங்கி வருகிறார். அவர் மீது எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சிறந்த ஆட்டத்தை ஆடி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார்.

இந்தியாவில் குறைந்த பட்சம் 10 இன்னிங்ஸில் விளையாடிய வெளிநாட்டு தொடக்க வீரர்களில் மிக குறைந்த சராசரி வைத்திருக்கும் வீரர் என்ற சோக சாதனையை வார்னர் படைத்திருக்கிறார்.  வார்னர் வெறும் இருபது என்ற அளவில் அவருடைய சராசரி இந்தியாவில் இருக்கிறது. மேலும் இன்று விளையாடும் போது டேவிட் வார்னருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதை காரணம் காட்டி அவரை நடப்பு டெஸ்ட் போட்டியிலேயே நீக்கிய ஆஸ்திரேலியா, மாட் ரீன்ஷாவை தொடக்க வீரராக மாற்றி உள்ளது.

- Advertisement -