டீம்ல 11 பேர் இருக்காங்க.. இந்த விஷயத்துக்கு என்னை மட்டும் குறி வச்சு ஏன் தாக்கறிங்க – டேவிட் வார்னர் கோபம்

0
174
Warner

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரே ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னருக்கு கடைசி சர்வதேச தொடராக இருக்கும். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் தன்மீது தொடர்ந்து வைக்கப்படும் விமர்சனம் குறித்து டேவிட் வார்னர் கோபப்பட்டு இருக்கிறார்.

இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு அவரை மீண்டும் நம்பி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்திருக்கிறது. தற்பொழுது இளம் துவக்க அதிரடி ஆட்டக்காரராக ஜாக் பிரேசர் இருக்கிறார். ஆனால் இவரையும் தாண்டி ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் டேவிட் வார்னரை நம்புகிறது.

- Advertisement -

சமீபத்தில் சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரிலும் டேவிட் வார்னர் பேட்டிங் மிகவும் மந்தமாக மாறியிருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் வாய்ப்புகள் கிடைப்பது கடினமாக மாறி இருக்கிறது.

மேலும் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஒமான் அணிக்கு எதிராக 51 பந்துகளில் 56 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதன் காரணமாக அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு கொண்டு வருகிறது.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் டேவிட் வார்னர் கூறும்பொழுது “என்னைப் பற்றி தொடர்ந்து ஏன் இந்த விஷயத்துக்கு விமர்சனங்கள் செய்யப்படுகிறது என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. அணியில் மொத்தம் 11 பேர் விளையாடுகிறார்கள். ஆனால் என்னைக் குறித்து மட்டுமே இந்த விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. நான் சென்று நேர்மையாக விளையாடுவதை தொடர்ந்து மக்கள் விமர்சிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : பந்தை சேதப்படுத்தினாரா பாக் வீரர்.. எதற்கு இந்த ஏமாற்று வேலை.? அமெரிக்க முன்னாள் வீரர் புகார்

எனக்கு வெஸ்ட் இண்டிஸ் சூழ்நிலைகள் எதுவும் ஆச்சரியம் அளிக்கவில்லை. நான் இங்கு 2018 ஆம் ஆண்டு சிபிஎல் தொடர் விளையாடியிருக்கிறேன். இங்கு நாம் எதிர்பார்க்காத படி பந்து பவுன்ஸ் ஆகும். நாம் இதற்கு சரியாக விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.