பந்தை சேதப்படுத்தினாரா பாக் வீரர்.. எதற்கு இந்த ஏமாற்று வேலை.? அமெரிக்க முன்னாள் வீரர் புகார்

0
438

பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிக்கு இடையே நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

மோசமான தோல்வியை சந்தித்திருக்கும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் பந்தை சேதப்படுத்தி இருப்பதாக அமெரிக்க அணியின் முன்னாள் வீரர் ரஷ்டி தெரான் புகார் கூறியிருக்கிறார். இவரது பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

டாலஸ் நகரில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடி அமெரிக்க அணி அதே 159 ரன்கள் இலக்கை எட்டிப்போட்டியில் சமனில் முடித்தது. இதனால் வெற்றியாளரை நிர்ணயிக்கும் சூப்பர் ஓவரில் அமெரிக்க அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

இந்த நிலையில் போட்டிக்குப் பிறகு அமெரிக்க அணியின் முன்னாள் வீரரும் தென்னாபிரிக்க அணியில் சர்வதேச போட்டியில் பங்கு பெற்ற ரஷ்டி தெரான் சமூக வலைதளத்தில் தனது பதிவு ஒன்றினை வெளியிட்டார். அதில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் ராப் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். பந்தை சேதப்படுத்தியதால்தான் அது ரிவர்ஸ் ஸ்விங் ஆனது என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தப் போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்து கொண்டிருந்த அமெரிக்கா அணி 12 வது ஓவருக்கு பிறகு பாகிஸ்தான் அணி பந்தை மாற்றி புதிய பந்தினை கையில் எடுத்தது. ஆட்டத்தின் 14வது ஓவரை ஹாரிஸ் ராஃப் வீசினார். அந்த 14 வது ஓவர் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அமெரிக்க அணியின் முக்கிய பேட்ஸ்மனான ஆண்ட்ரியாசை தனது ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சின் மூலம் வெளியேற்றினார். பொதுவாக பழைய பந்தில் தான் இவ்வாறு ஸ்விங் செய்ய முடியுமே தவிர, புதிய பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியாது.

இந்த சூழ்நிலையில்தான் அமெரிக்க அணியின் முன்னாள் வீரர் ரஷ்டி தெரான், பாகிஸ்தான் அணி வீரரான ஹாரிஸ் ராஃப் பந்தை வீசுவதற்கு முன்பாக தனது கை நகங்களால் பந்தை சுரண்டி சேதப்படுத்தியதாகவும், அதன் காரணமாகவே பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார். இந்த பதிவினை இட்டு அதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலையும் கேள்வி கேட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாகிஸ்தான் கிரிக்கெட் பத்தி இந்தவொரு விஷயம் தெளிவாகிடுச்சு.. பெரிய அவமானம் – கம்ரன் அக்மல் விமர்சனம்

சூதாட்டம் மற்றும் ஆடுகளத்தில் ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொள்வது என இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் அணி சமீப காலமாக எந்த சர்ச்சைகளும் இல்லாமல் மிக நேர்மையாக கிரிக்கெட் விளையாடி வருகிறது. இருப்பினும் இதுகுறித்து தற்போது வரை எந்த வீடியோ ஆதாரமும் இல்லாதது குறிப்பிடத்தக்கது

- Advertisement -