மோசமான நினைவுகளுடன் செல்கிறேன்.. இந்திய டெஸ்டிலிருந்து விலகிய டேவிட் வார்னர் வேதனை

0
648

பார்டர் கவாஸ்கர் தொடரில் பெரும் சாதனை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் இந்தத் தொடரில் வெறும் 26 ரன்களை மட்டும் தான் சேர்த்தார். இதில் அவருடைய சராசரி 8.6 ஆகும். இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் குறைந்த சராசரி வைத்திருக்கும் வெளிநாட்டு தொடக்க வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார்.

- Advertisement -

இந்திய தொடர் மிகவும் முக்கியமானது என்று கருத்து தெரிவித்திருந்த வார்னர் அதில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் அந்த தொடருக்கு முன்பாக தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் இரட்டை சதம் விளாசி இருந்தார். இந்த நிலையில் காயம் ஏற்பட்டுள்ளதால் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் தாயகம் திரும்புகிறார். இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள டேவிட் வார்னர் காயம் காரணமாக தொடரில் இருந்து பாதியில் செல்வது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

நான் எதிர்பார்த்த நினைவுகள் இது கிடையாது. எனினும் எங்களுடைய போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லி டெஸ்ட் நாங்கள் எதிர்பார்த்தபடி எங்கள் வழியில் செல்லவில்லை. ஆனால் இன்னும் இரண்டு ஆட்டங்கள் இருக்கிறது. அதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து சிட்னி டெஸ்டில் பேசிய வார்னர், நான் 2024 ஆம் ஆண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறேன். தேர்வுக்குழு உறுப்பினர்கள் நான் அணிக்கு தேவை இல்லை என நினைத்தார்கள் என்றால் அது அப்படியே நடக்கட்டும். எனினும் நான் வெள்ளை நிற கிரிக்கெட்டில் சாதிக்க விரும்புகிறேன்.இன்னும் எனக்கு 12 மாதங்கள் இருக்கிறது. பல கிரிக்கெட் போட்டிகள் எனக்கு முன்பு இருக்கிறது. அணிக்காக நான் தொடர்ந்து ரன் சேர்த்து வெற்றி பெற முயற்சி செய்வேன் என்று வார்னர் கூறியுள்ளார்.

- Advertisement -

தற்போது ஆஸ்திரேலியாவில் இரண்டு வாரம் ஓய்வில் இருக்கும் வார்னர் மார்ச் மாதம் 17ஆம் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாட இந்தியா வருகிறார். இதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் வார்னர் கேப்டனாக பணிபுரிகிறார். அதன் பிறகு ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வார்னர் பாரம்பரியமிக்க ஆசஸ் தொடரில் விளையாட போகிறார். அதன் பிறகு ஐசிசி ஒருவகக் கோப்பை போட்டியில் வார்னர் விளையாடத் திட்டமிட்டுள்ளார்.