டேவிட் மில்லர் தேர்ந்தெடுத்த சிறந்த டி20 அணி – தோனி, ரோஹித் பெயர் இல்லை

0
426
David Miller

தற்போதைய சமூக வலைதள யுகத்தில் ஒவ்வொரு வீரரும் ஒரு சிறந்த அணியை கூறி வருகின்றனர். டெஸ்ட் ஒருநாள் டி20 என மூன்று விதமான பார்மட்டுகளுக்கும் சிறந்த அணியை வீரர்கள் தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரரான டேவிட் மில்லர் தன்னுடைய சிறந்த டி20 அணியை வெளியிட்டுள்ளார். இதுவரை ஒரு சர்வதேச டி20 போட்டி கூட விளையாடாத ஒரு வீரரை அவர் தேர்வு செய்திருப்பதில் தான் பெருத்த ஆச்சரியம் அடங்கியுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய டேவிட் மில்லர் அந்த அணியில் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய சிறந்த அணியை தேர்வு செய்து வெளியிட்டார். தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இவரது பெயர் அந்த அணியில் இடம் பெறாவிட்டாலும் சக தென்ஆப்பிரிக்க வீரர்கள் 5 பேரை அவர் அந்த அணியில் தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

அவர் வெளியிட்டுள்ள அணியில் பலரின் கவனத்தை ஈர்த்தது பெண் பெயர் லான்ஸ் குளூஸ்னர். இதுவரை இவர் தென் ஆப்பிரிக்கா அணிக்காக ஒரு சர்வதேச டி20 போட்டியில் கூட விளையாடியது கிடையாது. மற்ற டி20 ஆட்டங்களில் ஐம்பத்தி மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐசிஎல் தொடரில் விளையாடிய இவர் ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியது கிடையாது. அதில் 1014 ரன்களும் இருபத்தி ஒன்பது விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இந்த அணிக்கு கேப்டனாக தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டிவிலியர்ஸ் இருப்பார் என்று மில்லர் கூறியுள்ளார். கேப்டன் பொறுப்புக்கு தோனி ரோஹித் போன்ற வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன்களில் ஒருவரை தேர்வு செய்யாதது ஆச்சரியம்தான். இந்த அணியின் தொடக்க வீரர்களாக கெயில் மற்றும் டீகாக் இருவரும் செயல்படுவர். மிடில் ஆடர் வீரர்களாக விராட் கோலி யுவராஜ் மற்றும் டிவிலியர்ஸை மில்லர் தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டர்களாக பொல்லார்டு மற்றும் க்ளூஸ்னர் இருக்க வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக மலிங்கா, பிரெட் லீ மற்றும் டேல் ஸ்டெய்னை மில்லர் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த அணியில் ஒரே சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர்.

டேவிட் மில்லர் தேர்வு செய்த சிறந்த டி20 அணி

கெயில், டீகாக், விராட், யுவராஜ், டிவில்லியர்ஸ், பொல்லார்டு, க்ளூஸ்னர், பிரெட் லீ, ஸ்டெய்ன், மலிங்கா மற்றும் தாகீர்.

- Advertisement -