டேவிட் மில்லருக்கு நேர்ந்த மிகப்பெரிய சோகம்! பரிதவிக்கும் குடும்பம்!

0
10181

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக டேவிட் மில்லருக்கு மிகப்பெரிய சோகம் நேர்ந்துள்ளது.

தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வரும் டேவிட் மில்லர், தனிப்பட்ட வாழ்க்கையில் கடினமான சூழலை சந்தித்து வருகிறார்.

- Advertisement -

டேவிட் மில்லரின் நெருங்கிய ரசிகர் மற்றும் நெருங்கிய நண்பரின் குழந்தையுமான ஆனே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஐந்து வயது முதல் புற்றுநோயை எதிர்த்துப் போராடிவரும் ஆனே, அக்டோபர் எட்டாம் தேதி இறந்துள்ளார். இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அக்குழந்தையுடன் இருந்த சந்தோஷமான தருணங்களை வீடியோ பதிவாக பதிவிட்டு இருக்கிறார் டேவிட் மில்லர்.

மில்லர் குழந்தையுடன் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்தவுடன் பலரும் இது மில்லரின் குழந்தைதான் என தவறுதலாக புரிந்து கொண்டனர். பிறகு அதைப்பற்றி விசாரித்த போது மில்லரின் நெருங்கிய நண்பர் குழந்தை என தெரிய வந்திருக்கிறது.

5 வயதில் இருந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதை எதிர்த்து போராடி வந்திருக்கிறார். டேவிட் மில்லர் குழந்தைக்கும், குழந்தையின் குடும்பத்தினருக்கும் நீண்ட காலமாக ஆதரவு தந்து வந்திருக்கிறார். மேலும் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகளுக்கு இந்த குழந்தையையும் அழைத்துச் சென்று இருக்கிறார். இருவரும் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக் கொண்டாடிய நேரங்களை வீடியோ பதிவில் நம்மால் காண முடிந்தது.

- Advertisement -

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மில்லர் பதிவிட்டதாவது: இனிமேல் தான் இன்னும் நிறைய மிஸ் செய்வேன். சிறு வயதிலேயே மிகப்பெரிய உள்ளம் கொண்ட குழந்தை. அப்படி ஒரு நல்லுள்ளத்தை நான் இதுவரை எவரிடமும் கண்டதில்லை. உனது போராட்டத்தை நான் கண்கூட கண்டிருக்கிறேன். ஆனாலும் அந்த சிறு வயதில் மிகவும் நேர்மறையாக முகத்தில் சிரிப்புடன் காணப்பட்டிருக்கிறாய். குழந்தைத்தனமாக அதே நேரம் குறும்புத்தனமாக இருக்கும் உனது சில பக்கங்களை நானும் பார்த்திருக்கிறேன். நீ உன் வாழ்வில் இந்த சிறு வயதில் பல்வேறு மக்களை சந்தித்து இருக்கிறாய், அவர்கள் அனைவரையும் உன் பக்கம் ஈர்த்திருக்கிறாய். உனது இந்த சிறு பயணத்தில் நானும் ஒரு முக்கிய பங்காக இருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது நெகழ்ச்சி அடைகிறேன். ஐ லவ் யூ, ரிப்!” என்ன பதிவிட்டு இருந்தார்.