“இந்திய அணியில் அவருக்கு பலவீனமே இல்லை.. அதனால அந்த பையனின் ஈகோவை தூண்டுங்க” – இங்கிலாந்து அணிக்கு லெஜெண்ட் அறிவுரை

0
69
Jaiswal

நாளை மறுநாள் குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.

இந்த போட்டிக்கான அணியில் இருந்து மீண்டும் காயத்தின் காரணமாக கேஎல்.ராகுல் வெளியே சென்று இருக்கிறார். அவருடைய இடத்திற்கு தேவ்தத் படிக்கல் அழைக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியில் ரோகித் சர்மா மட்டுமே பேட்டிங் யூனிட்டில்அனுபவம் கொண்டவராக இருப்பார். இதற்கு அடுத்து ஜடேஜா மற்றும் அஸ்வின் மட்டுமே அனுபவம் கொண்டவர்கள்.

எனவே இளம் பேட்டிங் யூனிட்டை வைத்து இந்திய அணி மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடி இருக்கிறது. இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இது ஒரு சோதனையாகவும் அமைகிறது.

மேலும் போட்டி நடக்கும் ராஜ்கோட் மைதானம் பேட்டிங் செய்ய மிகவும் சாதகமானது. எனவே டிரா ஆகவே அதிக வாய்ப்புகள் உண்டு. இப்படியான ஆடுகளத்தை இங்கிலாந்து பேட்ஸ்மாங்கில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இங்கிலாந்து லெஜெண்ட் டேவிட் லாயிட் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ராஜ்கோட் மைதானத்தில் நீங்கள் முதல் அல்லது இரண்டாவது என எப்படி பேட்டிங் செய்தாலும் பெரிய ஸ்கோர் வரும். இதில் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது. எனவே இந்த போட்டி டிரா ஆவதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு.

பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தையே விளையாடும். இதற்கு நல்ல முறையில் ஒத்துழைக்கக் கூடிய ஆடுகளம் கிடைக்கப் போகிறது. எனவே இதை இங்கிலாந்து அணி பயன்படுத்திக் கொண்டு, முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் ஒருவர் பெரிய சதம் அடிக்க வேண்டும். 50 மற்றும் 30 போன்ற ரன்களில் வெளியேறுவது, 250 முதல் 270 ரன்கள் எடுப்பது சரிப்பட்டு வராது.

இரண்டாவது டெஸ்டில் கில் முன்னேறி நன்றாக விளையாடினார். இந்திய பேட்டர்கள் அனைவருமே பெரிய ஸ்கோர்கள் அடிப்பதில் அற்புதமானவர்கள். இங்கிலாந்துக்கு பிரச்சனையாக இருந்து வந்தது ஜெய்ஷ்வால். எனவே இங்கிலாந்துக்கான திட்டமே அவரை எப்படி ஆட்டம் இழக்க வைப்பது என்பதாகத்தான் இருக்கும்.

இதையும் படிங்க : இஷான் கிஷான் குர்னால் பாண்டியா.. பிசிசிஐ திடீர் அதிரடி நடவடிக்கை.. வெளியான புதிய தகவல்

வெளிப்படையாக பார்த்தால் அவருக்கு தனிப்பட்ட பலவீனம் என்று எதுவும் கிடையாது. மேலும் எடுத்ததும் இடது கை சுழற் பந்துவீச்சாளரை வைத்து ஆரம்பிப்பதை விட, தொடர்ச்சியாக ஒரு ஆப் ஸ்பின்னரை பந்து வீச வைக்க வேண்டும். மேலும் அவருடைய ஈகோவில் விளையாட வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.