உலகக்கோப்பை குவாலிபயர்: வெஸ்ட் இண்டீஸ் வெறித்தனம்… அமெரிக்கா தொடர்ந்து 3 தோல்வி! பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் த்ரில் போட்டிகள்!

0
729

உலகக்கோப்பை குவாலிஃபயர் சுற்றுலா இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகள் அபார வெற்றி பெற்றுள்ளன.

வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பைக்கு குவாலிஃபயர் சுற்று தற்போது ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று வருகின்றன.

- Advertisement -

தலா ஐந்து அணிகள் என குரூப் ஏ மற்றும் குரூப் பி பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று முதலாவதாக நடைபெற்றது.

அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் சாய் ஹோப் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் சதம் அடித்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு உதவினர். 50 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெடுகள் இழப்பிற்கு 339 ரன்கள் அடித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. கேப்டன் சாய் ஹாப் 132 ரன்கள், நிக்கோலஸ் பூரன் 115 ரன்கள் அடித்தனர்.

340 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய நேபாளம் அணிக்கு அதிகபட்சமாக ஆரிப் ஷேக் 63 ரன்கள், குல்ஞன் ஷா 42 ரன்கள் அடித்தனர். 49.4 ஓவர்களில் 238 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது நேபாளம் அணி. இதன் மூலம் 101 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.

- Advertisement -

அதே குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நெதர்லாந்து மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா ஆகிய இரு அணிகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் அமெரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.

இப்போது யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த அணுகு அதிகபட்சமாக சயான் ஜஹாங்கீர் 71 ரன்கள் அடித்தார். அடுத்த அதிகபட்சமாக கஜானந் சிங் 33 ரன்கள், ஜேஸ்சி சிங் 38 ரன்கள் அடிக்க, 50 ஓவர்களில் தட்டுத்தடுமாறு எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் மட்டுமே அடித்தது அமெரிக்கா அணி.

212 ரன்கள் இலக்கை துரத்திய நெதர்லாந்து அணிக்கு ஆரம்பத்தில் வரிசையாக விக்கெட்டுகள் சரிந்து வந்தன. 83 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தபோது தேஜா மற்றும் எட்வர்ட்ஸ் இருவரும் நின்று பார்ட்னர்ஷிப் அமைத்து நெதர்லாந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

தேஜா 58 ரன்கள், எட்வர்ட்ஸ் 60 ரன்கள் அடித்துக் கொடுத்து ஆட்டமிழக்க, கடைசியில் வந்த வீரர்கள் போட்டியை ஃபினிஷ் செய்தனர். 43.2 ஓவர்களில் இலக்கை எட்டி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதலாவது அணி வெற்றி பெற்றது. இந்த குவாலிபயர் சுற்றில் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.