2007 டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்பட்ட வீரர்களின் தற்போதைய நிலை

0
218
Shoaib Malik and MS Dhoni

முதல் டி20 உலகக்கோப்பை 2007ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்றது. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் திரில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது இந்திய அணி. அதற்கு பிறகு இங்கிலாந்து இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கோப்பையை முத்தமிட்டது. நடப்பு 2021 டி20 உலகக்கோப்பைத் தொடரில் மொத்தம் பங்கேற்றது. ஆனால் முதல் தொடரில் வெறும் 12 அணிகள் மட்டுமே மோதிக்கொண்டன. 2007 டி20 உலகக்கோப்பையில் கேப்டனாக செயல்பட்ட வீரர்களின் தற்போதைய நிலையைப் பற்றி இக்கட்டுரையில் பின்வருமாறு காண்போம்.

ஆஸ்திரேலியா – ஆதம் கில்கிறிஸ்ட்

அதிரடி தொடக்க வீரர் கில்கிறிஸ்ட், ஆஸ்திரேலிய டி20 உலகக்கோப்பை அணியை வழிநடத்தினார். சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலியா அரை இறுதி வரை முன்னேறியது. தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான ஆதம் கில்கிறிஸ்ட் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருத்து ஓய்வ்வுப் பெற்றார்.

- Advertisement -

இங்கிலாந்து – பால் காலிங்வுட்

கேப்டன் பால் காலிங்வுட் தான் இங்கிலாந்து அணியை சூப்பர் 8 சுற்றுக்கு அழைத்துச் சென்றார். தற்போதைய இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளராக இவர் பணிபுரிகிறார்.

பாகிஸ்தான் – சோயிப் மாலிக்

இப்பட்டியலில் இருக்கும் கேப்டன்களில், இன்னுமும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் வீரர் இவர் ஒருவரே. சோயிப் மாலிக், கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் அணிக்குள் நுழைந்தார்.

நியூசிலாந்து – டேனியல் வெட்டோரி

2007 டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணி வெட்டோரியால் வழிநடத்தப்பட்டார். அத்தொடரில் நியூசிலாந்து அணி அரை இறுதிப் போட்டியில் தோல்வி பெற்று வெளியேறியது. ஓய்வு பெற்ற டேனியல் வெட்டோரி, பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

தென்னாபிரிக்கா – கிரேம் ஸ்மித்

இத்தொடரை நடத்திய தென்னாபிரிக்கா அணி சூப்பர் 8 சுற்றில் மூன்றாவது இடத்தில் பிடித்தது. முன்னாள் கேப்டனான கிரேம் ஸ்மித், நடப்பு தென்னாபிரிக்க‌ அணியின் இயக்குனராக உள்ளார்.

இலங்கை – மஹேலா ஜெயவர்தனே

ஜெயவர்தனே தலைமையின் கீழ் ஆடிய இலங்கை அணி, சூப்பர் 8 சுற்று வரை முன்னேறியது. 2021 டி20 உலகக்கோப்பையில் இலங்கை அணியின் உதவியாளராக இவர் இணைந்தார்.

கென்யா – ஸ்டீவ் டிக்களோ

கென்யா அணி பங்கேற்ற ஒரே டி20 உலகக்கோப்பை இது தான். அவ்வணியின் ஸ்டீவ் டிக்களோ வழிநடத்தினார். இவர் தற்போது தன்சானியன் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே – புரோப்ஸர் உட்சயா

2007 டி20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக புரோப்ஸர் உட்சயா ஆடினார். 2014ல் அவரது பந்துவீச்சு சர்ச்சைக்கு உள்ளானது. அதன் பின்னர் 2015 முதல் அவர் கிரிக்கெட் ஆடுவதில்லை.

வெஸ்ட் இண்டீஸ் – ராம்நரேஷ் சர்வான்

இரண்டு குரூப் போட்டிகளிலுமே வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவி பரிதாபமாக வெளியேறியது. அத்தொடரில் மேற்கிந்தியத் தீவுகளின்‌‍ கேப்டனாக செயல்பட்ட ராம்நரேஷ் சர்வான், தற்போது பயிற்சியாளராக உள்ளார்.

வங்கதேசம் – முமுஹம்மது அஷ்ரபுல்

முஹம்மது அஷ்ரபுல்லின் வழிகாட்டுதலின் படி ஆடிய வங்கதேசம், சூப்பர் 8 சுற்று வரை சென்றது. வங்கதேச அணியின் இடம் கிடைக்காத முமுஹம்மது அஷ்ரபுல், உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்தியா – எம்.எஸ்.தோனி

கேப்டன் எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி முதல் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது. இவர் 2020ல் ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் ஐ.பி.எலில் தொடர்ந்து ஆடுகிறார். சமீபத்தில், 2021 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் மென்டாராக இவர் பொறுப்பேற்றார்.

ஸ்காட்லாந்து – ரியான் வாட்சன்

2007 டி20 உலகக்கோப்பையில் ஸ்காட்லாந்து அணி, ரியான் வாட்சன் தலைமையின் கீழ் ஆடியது. ஒரு சில வருடங்களுக்கு முன்னர் தான் ஓய்வு பெற் ரியான், தற்போது பயிற்சியாளராக பணியாற்றுகிறார்.