டி20 உலக கோப்பை டாப் 4 டீம்ஸ்.. பாட் கம்மின்ஸ் கொடுத்த எதிர்பாராத பதில்.. வியப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்

0
79

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ளது. இதில் அரையிறுதிக்கு முன்னேறும் டாப் நான்கு அணிகளின் பெயரை கூறுமாறு பேட்டியாளர் ஆஸ்திரேலியா அணி வீரர் கம்மின்சிடம் கேட்கப்பட்டபோது அவரது பதில் அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

ஐசிசி கிரிக்கெட் தொடர்களில் மிக முக்கியமான தொடரான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு சர்வதேச அணியும் தங்களது அணி வீரர்களை அறிவித்துள்ள நிலையில், இந்திய அணியும் சில நாட்களுக்கு முன்பாக 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது.

- Advertisement -

அதில் சில சர்ச்சைகள் எழுந்த நிலையில் அந்த சர்ச்சைகளுக்கான முழு விளக்கத்தையும் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அஜித் அகர்கர் மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான குழு முழு விளக்கத்தையும் அளித்தது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருவதால் ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த பேட் கம்மின்ஸ் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

அவர்தான் ஆஸ்திரேலிய டி20 உலக கோப்பை அணியை வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிச்சல் மார்ஸ் தலைமையிலான அணியை அறிவித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஆச்சரியப்படுத்தியது. இருப்பினும் கம்மின்ஸ் ஒரு வேகப்பந்துவீச்சாளராக அணியில் தொடர்கிறார். இந்த டி20 அணியில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் பெயர் இடம் பெறவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியின்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கம்மின்ஸ் இடம் உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெறும் டாப் நான்கு அணிகளை தேர்வு செய்யுமாறு பேட்டியாளர் கூறினார். அப்போது கம்மின்ஸ் நிச்சயமாக ஆஸ்திரேலியா அணியை தேர்வு செய்வேன் மற்ற மூன்று அணிகள் குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “டி20 உலக கோப்பை காண டாப் நான்கு அணிகள் குறித்து கேட்கிறீர்கள். அதில் நான் ஆஸ்திரேலியா அணியை நிச்சயமாக தேர்வு செய்வேன். மற்ற மூன்று அணிகளையும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். மற்ற மூன்று அணிகள் குறித்து எந்த கவலையும் இல்லை. நீங்களே மற்ற மூன்று அணிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: நடராஜனுக்கு இந்த முக்கிய குவாலிட்டி இருக்கு.. இந்திய டீம்ல இருக்கனும் – ஹைதராபாத் கோச் பேட்டி

அதாவது அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா அணி தகுதி பெறும். மற்ற மூன்று அணிகளில் எது வந்தாலும் கவலை இல்லை ஆஸ்திரேலியா அணி அதனை எதிர்கொள்ளும் என்பது போல கம்மின்ஸ் கூறி இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.