“கம்மின்ஸ் எதுக்கும் கவலைப்படல.. இப்ப கோப்பையோட இருக்க காரணமே வேற..!” – ஸ்டார்க் அதிரடி பேட்டி!

0
431
Starc

ஆஸ்திரேலியா அணி 2018 ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கேப்டன் ஸ்மித் மற்றும் வார்னர் போன்ற முக்கிய வீரர்களை முக்கிய பொறுப்பில் இழந்தது.

இதற்கடுத்து ஆஸ்திரேலியா அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் டிம் பெய்ன் மற்றும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆரோன் பின்ச் இருவரும் வழி நடத்தினார்கள்.

- Advertisement -

இதில் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது. கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகளில் இருந்து ஜஸ்டின் லாங்கர் தலைமையில் ஆஸ்திரேலியா அணி மீண்டு வந்தது.

இந்த நிலையில் மீண்டும் அத்துமீறிய பாலியல் பேச்சு சம்பந்தமாக டிம் பெய்ன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இந்த நேரத்தில் அதிரடியாக பாட் கம்மின்ஸ்கேப்டனாக கொண்டுவரப்பட்டார். வேகப்பந்துவீச்சாளர் கேப்டனாக வருவது குறித்து நிறைய வெளியில் விமர்சன பேச்சுகள் இருந்தன.

ஆஸ்திரேலியா அணியை மெதுவாக முன்னேற்றிக் கொண்டு வந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன்ஷிப்பை கைப்பற்றி அசத்தினார். உடனே ஆசஸ் தொடரை தக்க வைத்தார்.

- Advertisement -

இந்த நிலையில் தான் அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு சரியான கேப்டன் இல்லை என்று கூறப்பட்டது. கேப்டனாக இருக்கின்ற காரணத்தினால் அவர் அணியில் நீடிக்கிறார் என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அவர் ஒரு வித்தியாசமான கேப்டனாக செயல்பட்டதோடு, பந்துவீச்சாளராகவும் அசத்தி ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

நாடு திரும்பி உலகக் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் ஸ்டார்க் கம்மின்ஸ் குறித்து கூறும் பொழுது “கம்மின்ஸ் மிகவும் அபாரமானவர். அவரைச் சுற்றி அவரது கேப்டன்சி மேல் நிறைய விமர்சகர்கள் இருந்தார்கள். கேப்டன்சி ஒரு குறிப்பிட்ட வழியில்தான் செய்யப்பட வேண்டும் என்று அவர் மீது கருத்துக்கள் திணிக்கப்பட்டன. ஆனால் கம்மின்ஸ் வெளியில் இருந்து வரும் சத்தங்களால் ஒருபோதும் தடுமாறியது கிடையாது.

உலகக் கோப்பையில் அவர் கேப்டனாக செயல்பட்டது மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடியதன் மூலமாக இதற்கெல்லாம் அவர் பதில் அளித்தார். நாங்கள் வித்தியாசமாகவும் தைரியமாகவும் சில விஷயங்களை செய்தோம். அதனால்தான் இப்போது நாங்கள் கோப்பையுடன் இருக்கிறோம்!” என்று கூறியிருக்கிறார்!