அவங்க சொல்லிட்டாங்க.. நியூஸி மேட்சுக்கு இந்த 2 இந்திய வீரர்களுக்கு ஓய்வு.. 2 பேர் புதுசா வர்றாங்க – ஆகாஷ் சோப்ரா பேட்டி

0
405

சாம்பியன்ஸ் டிராபி தொடர் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவும் நியூசிலாந்து அணியும் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில் இரு அணிகளும் தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் மார்ச் இரண்டாம் தேதி விளையாடுகிறது.

இந்த போட்டி முடிவடைந்த ஒரு நாள் இடைவெளியில் மார்ச் 4-ஆம் தேதி இந்திய அணி தங்களுடைய முதல் அரை இறுதி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. மேலும் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் சம்பிரதாய ஆட்டம் என்பதால் இந்திய அணியில் சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

3 வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படலாம்:

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா,” டைம்ஸ் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் ரோகித் சர்மாவுக்கு நியூசிலாந்துக்கு தான் போட்டியில் ஓய்வு அளிக்கப்படலாம். இதே போன்று முகமது சமிக்கும் ஓய்வு அளிக்கப்படலாம்.”

“கே எல் ராகுலும் விளையாடாமல் இருக்கலாம். இந்த மூன்று வீரர்களுக்கும் பதிலாக ரிஷப் பண்ட் மற்றும் ஆர்ஸ்திப் சிங் ஆகியோர் பிளேயிங் லெவனலில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் என்னை பொறுத்தவரை, வெற்றி பெறுவது என்பது ஒரு பழக்கம். எனவே ஒரே அணியை வைத்து தொடர்ந்து வெற்றி பெற தான் அணி நிர்வாகம் பார்க்க வேண்டும்.”

- Advertisement -

அணியை மாற்ற கூடாது:

“நீங்கள் தொடர்ந்து ஐந்து ஒருநாள் போட்டிகளில் ஒரே அணியை வைத்து வெற்றி பெறுகிறார்கள் என்றால் அதை மாற்றாமல் தொடர்ந்து அதையே பாலோ செய்யுங்கள்.ஜடேஜா இந்த தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.”

இதனால் ஜடேஜாவுக்கு கடைசி லீக் ஆட்டத்தில் வாய்ப்பு கொடுங்கள். வருண் சக்கரவர்த்தியும் இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாட வில்லை. அவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அணி நிர்வாகம் நிணைக்கும்.
இதேபோன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அதிக அளவு இடது கை பேட்ஸ்மேன் இருப்பதால் வாஷிங்டன் சுந்தரையும் இந்திய அணி நிர்வாகம் சேர்க்க நினைக்கும்.”

” ஆனால் அரையிறுதி ஆட்டத்தில் ஜடேஜா கண்டிப்பாக இடம் பெறுவார் என்பதால் அவரை அணியை விட்டு நீக்க கூடாது. என்னை கேட்டால் முகமது சமி தவிர எஞ்சிய எந்த வீரருக்கும் நியூசிலாந்துக்கு எதிராக போட்டியில் ஓய்வு வழங்கக்கூடாது.”

இதையும் படிங்க: இப்ப சொல்றேன்.. நான் சாம்பியன்ஸ் டிராபியை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான் – மிட்செல் ஸ்டார்க் பேட்டி

“ஏனென்றால் இந்த போட்டி முடிவடைந்து நான்காம் தேதியே மீண்டும் நாம் அரையிறுதியில் விளையாட இருக்கின்றோம். இதனால் சமி ஒரு நாள் இடைவேளையில் முழு உடல் தகுதியில் பெறுவது என்பது கடினமாகும். இதனால் அவருக்கு பதில் அஸ்வின் பேசியது விளையாடலாம். இல்லையென்றால் தொடர்ந்து ஒரே அணியை வைத்து விளையாடுவது தான் சிறந்தது” என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -