இப்ப சொல்றேன்.. நான் சாம்பியன்ஸ் டிராபியை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான் – மிட்செல் ஸ்டார்க் பேட்டி

0
606

பாகிஸ்தானில் நடந்து வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. ஆனால் குரூப் பி பிரிவில் இதுவரை எந்த அணியும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யவில்லை. இங்கிலாந்து அணி மட்டுமே வெளியேறி இருக்கிறது.

இன்னும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது. இதில் ஆஃப்கானிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா அணியின் பவுலிங் சுமாராக இருப்பதால், அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

மிட்சல் ஸ்டார்க் விளக்கம்

ஆஸ்திரேலியா அணியின் பவுலிங் சுமாராக இருப்பதற்கு முன்னணி வேகப்பந்துவீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் கடைசி நேரத்தில் விலகியது முக்கிய காரணமாகும். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான உத்தேச அணியில் மிட்சல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டாலும், அவர் ஏன் கடைசி நேரத்தில் விலகினார் என்பது இதுவரை தெரியவில்லை.

இதுகுறித்து மிட்சல் ஸ்டார்க் கூறும் போது, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகியதற்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன. அதில் சில சொந்த காரணங்களும் அடங்கும். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போதே எனது கணுக்காலில் வலி இருந்தது. அதனை ஓய்வில் இருந்து சரி செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இருக்கிறது.

- Advertisement -

WTC Final எப்போது?

அதேபோல் ஐபிஎல் தொடரிலும் விளையாட வேண்டும். முக்கியமான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தான் காரணம், அதற்கு என் உடலை தயார் செய்ய வேண்டும். அடுத்த 2 மாதங்கள் சரியாக காயமில்லாமல் விளையாடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் வீரர்களை திட்டுவது அடிப்பது.. கோச்சா என்னுடைய பாலிசி இப்படிதான் – அகிப் ஜாவேத் பேட்டி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9ஆம் தேதியுடன் நிறைவடையும் சூழலில், அதன்பின் மார்ச் 22 முதல் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. இம்முறை மிட்சல் ஸ்டார்க் டெல்லி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதன்பின் மே 25ம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டி முடிவடைய உள்ள சூழலில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா விளையாடவுள்ளது.

- Advertisement -