நாளை சிஎஸ்கே அதிரடியான உத்தேச பிளேயிங் XI.. லக்னோவுக்கு பதிலடி தர புது மாற்றங்களுடன் மாஸ்டர் பிளான்

0
1012
CSK

தற்போது ஐபிஎல் தொடர் முதல் பாதியை கடந்து, பிளே ஆப் சுற்றுக்கான அணிகளின் போராட்டங்கள் மிகவும் தீவிரமாக மாறி இருக்கின்றன. இந்த நிலையில் சிஎஸ்கே அணி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் லக்னோ அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே சில முக்கிய மாற்றங்களுக்கு தயாராகி வருவதாக வெளியில் தகவல்கள் வருகிறது.

சிஎஸ்கே அணி கடந்த போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக அவர்களின் சொந்த மைதானத்தில் தோல்வி அடைந்தது. ஆடுகளத்திற்கு தேவையான ரன்களை அடித்த போதிலும் கூட, பந்துவீச்சில் விக்கெட்டுகள் கைப்பற்ற முடியாமல், சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது.

- Advertisement -

தற்பொழுது சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில், ஏழு போட்டிகளில் நான்கு வெற்றிகள் உடன் இருக்கிறது. தற்போது இதே நான்கு வெற்றிகள் உடன் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் இருக்கின்றன. எனவே சிஎஸ்கே அணிக்கு பெரிய போட்டி புள்ளி பட்டியலில் நிலவி வருகிறது. எனவே நாளைய போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம்.

தற்பொழுது சிஎஸ்கே அணியில் சர்துல் தாக்கூர் இடத்திற்கு ராஜ்யவர்தன் ஹங்கர்கேகரை கொண்டு வருவதற்கு பேச்சு வார்த்தைகள் சென்று கொண்டிருக்கிறது. அவரால் பவர் பிளே முடிந்து மற்றும் கடைசிக் கட்டத்தில் பந்து வீச முடியும். இதன் காரணமாக சிஎஸ்கே கேப்டனுக்கு கடைசிக் கட்டத்தில் ஓவர்களை பந்துவீச்சாளர்களுக்கு பிரித்து தருவதில் இருக்கும் அழுத்தம் குறையும்.

மேலும் சொந்த மைதானத்தில் விளையாடும் சிஎஸ்கே அணி தீக்ஷனாவை களம் இறக்கவும் யோசிக்கலாம். அவர்களிடம் குயிண்டன் டி காக் மற்றும் நிக்கோலஸ் பூரன் என இரண்டு அதிரடியான இடது கை ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். இதனால் தைரியமாக முஸ்தபிஷூர் ரஹமானை வெளியில் வைக்கலாம். ஆனால் தற்போதைக்கு ஒரு மாற்றத்திற்கு மட்டுமே சிஎஸ்கே அணி நிர்வாகம் ஆலோசிப்பதாக தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : கோலியுடன் சமாதானம்.. ஆனால் ஆர்சிபி போட்டியில் நடுவருடன் கம்பீர் சண்டை.. களத்தில் என்ன நடந்தது?

நாளை லக்னோ அணிக்கு எதிரான சிஎஸ்கே அணியின் வலிமையான உத்தேச பிளேயிங் லெவன் :

ரகானே, ரச்சின் ரவீந்தரா, ருதுராஜ், சிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, தோனி, ராஜ்யவர்தன் ஹங்கர்கேகர், தீபக் சகர் மற்றும் முஸ்தபிஷூர் ரஹமான். மேலும் இம்பேக்ட் பிளேயராக மதிஷா பதிரனா.