300 ரன் அடிக்கிற பிட்ச் போடுறது நியாயமா.. நாங்க பாவம் இல்லையா.. இந்த மனநிலை மாறனும் – தீபக் சகர் பேட்டி

0
14
Deepak

நடப்பு 17-வது ஐபிஎல் சீசன், மற்ற ஐபிஎல் சீசன்களை விட பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமாக இருந்து வருகிறது. சிக்ஸர்கள் அடிக்கப்படும் விகிதம் மிக அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக பந்துவீச்சாளர்கள் மிக அதிகமாக ரன்களை விட்டு தந்து கொண்டு வருகிறார்கள். போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் இல்லாமல், இரண்டு அணிகளின் பேட்ஸ்மேன்கள் மோதிக் கொள்ளும் போட்டியாக மாறி இருக்கிறது.

தற்பொழுது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் 277 ரன்கள் குவித்தது. இதற்கு அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிராக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் 272 ரன்கள் குவித்தது.

- Advertisement -

முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி கொண்டு வருவதால், போட்டி சாதாரண கிரிக்கெட் ரசிகர்களுக்கு சுவாரசியமாக தெரிய ஆரம்பித்து இருந்தாலும் கூட, கிரிக்கெட்டை ஆழமாக பார்க்கக்கூடிய ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்திருக்கிறது. பேட்டிங் செய்வதற்கு சாதகமான தட்டையான ஆடுகாலங்களால் கிரிக்கெட் அழிந்து விடும் என்று சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

இதுவரையில் இது சம்பந்தமாக ஐபிஎல் தொடரில் விளையாடும் எந்த வீரர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தீபக் சகர் இதுகுறித்து முதல் முறையாக பேசி இருக்கிறார். முழுக்க பேட்மேன்களுக்கு சாதகமாக அமைக்கப்படும் ஆடுகளங்களை கைவிடும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து தீபக் சகர் கூறும்போது “இங்கு பந்து ஸ்விங் குறைவாகவே ஆகும் என்று நினைக்கிறேன். ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மிகவும் தட்டையாக இருக்கிறது. கடந்த விசாகப்பட்டினம் ஆடுகள தயாரிப்பாளரிடம் 300 ரன்கள் அடிப்பதை பார்க்க விரும்புகிறீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் 277 ரன்கள் அடித்ததை நான் முறியடிக்க விரும்புகிறேன் என்று சிரித்தபடி கூறினார். இந்தமனநிலை மாற வேண்டும். 200 ரன்கள் எடுக்கின்ற ஆடுகளங்கள் பரவாயில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : கேப்டன் ருதுராஜுக்கு 4வது முறையாக நடந்த துரதிஷ்டம்.. சிஎஸ்கே வைத்த 3 ட்விஸ்ட்

நான்நிறைய டி20 போட்டிகள் விளையாடி இருக்கிறேன். பந்து ஆரம்பத்தில் ஸ்விங் ஆகும், மேலும் ஆரம்பத்தில் கொஞ்சம் பவுன்ஸ் கிடைக்கும். இவ்வளவு இருந்தாலே போதும். மிகவும் தட்டையான ஆடுகளங்களாக இருக்காது. பந்து வீச்சாளர்களுக்கும் ஏதாவது கொஞ்சம் இருக்கும். இப்பொழுது இரண்டு பவுன்சர்கள் கொடுத்திருக்கிறார்கள். இதை புதிய பந்தில் பயன்படுத்தகூடாது. மிடில் ஓவர் மற்றும் கடைசிக்கட்ட ஓவர்களில் பயன்படுத்துவது சரியாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.