வீடியோ: விக்கெட்டே விடாம சிஎஸ்கே ஜெயிச்சிருக்கலாம்… கான்வெ செய்த தவறால் ருத்துராஜ் அவுட்; அதுக்காக உச்சகட்ட வெறுப்பான கான்வெ – அந்த ரன் அவுட் வீடியோ!

0
766

நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து வந்த ருத்துராஜ்-டெவான் கான்வெ ஜோடி, கான்வெ செய்த தவறால் பிரிந்தது. ருத்துராஜ் ரன் அவுட் ஆனார். இதற்காக கான்வெ விரக்தியடைந்தார். இதன் விடியோவை கீழே பார்ப்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு, ஓபனிங் செய்த ஹாரி புரூக் 18 ரன்களுக்கு அவுட் ஆனார். அபிஷேக் ஷர்மா(34) மற்றும் திரிப்பாதி(21) இருவரும் ஜடேஜாவின் பந்தில் வெளியேறினர்.

- Advertisement -

மயங்க் அகர்வால்(2), தோனியிடம் ஸ்டம்பிங் அவுட் ஆனார். கிளாசன்(17) மற்றும் மார்கோ யான்சன்(17) இருவரும் இருவரும் கடைசியில் சில ரன்கள் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எட்டியது ஹைதராபாத் அணி.

சேஸ் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ருத்துராஜ் மற்றும் டெவான் கான்வெ இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து, விக்கெட் இழப்பின்றி ஆட்டத்தை முடிக்க எடுத்துச்சென்றனர். அப்போது உம்ரான் மாலிக் ஓவரில் கான்வெ நேராக அடிக்க, பந்து உம்ரான் கையில் பட்டு எதிர்பக்கம் இருந்த ஸ்டம்பில் அடித்தது.

துரதிஷ்டவசமாக, அந்த நேரத்தில் கிரீஸ் விட்டு வெளியே இருந்தார் ருத்துராஜ். இவர் 35 ரன்களுக்கு ரன் அவுட் ஆகி வெளியேறினார். இந்த தவறை செய்ததால் கான்வெ தன்மீதே கோபம் அடைந்தார். இதன் விடியோவை பின்வருமாறு காணலாம்.

- Advertisement -

முதல் விக்கெட்டிற்கு கான்வெ-ருத்துராஜ் ஜோடி 87 ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்களுக்கு வேலையை எளிதாக்கினார்கள்.

பின்னர் வந்த ரஹானே, ராயுடு இருவரும் சொற்பரன்களுக்கு வெளியேறினாலும், டெவான் கான்வெ இறுதிவரை நின்று 77 ரன்கள் அடித்து 18.4 ஓவர்களில் இலக்கை எட்ட உதவினார். சிஎஸ்கே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

டெவான் கான்வெ செய்த தவறால் ருத்துராஜ் ரன் அவுட்டான வீடியோ:

புள்ளிப்பட்டியலில் நல்ல முன்னேற்றம்:

சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 6 லீக் போட்டிகளில் நான்கு வெற்றிகள் பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகளும் தலா 8 புள்ளிகள் பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன.