CSK vs RCB போட்டி டிக்கெட் விற்பனை தொடங்கும் நாள் மற்றும் விலைகள் – முழு விபரங்கள்

0
76
IPL2024

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய அளவில் காத்துக் கொண்டிருக்கின்ற ஐபிஎல் 17ஆவது சீசன் மார்ச் மாதம் 22ஆம் தேதி துவங்குகிறது. இன்றைக்கு இருந்து இன்னும் ஆறு நாட்கள் கழித்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து மிகக் கோலாகலமாக ஐபிஎல் துவக்க விழா நடக்க இருக்கிறது. தற்பொழுது முதல் 21 போட்டிகளுக்கு மட்டுமே அட்டவணை வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக் கொள்கின்றன. இதுவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு சிறப்பான புள்ளி விபரங்கள் ஏதும் இல்லை. இதேபோல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும் சிறப்பான புள்ளி விபரங்கள் இல்லை.

- Advertisement -

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எடுத்துக் கொண்டால் மதிஷா பதிரனா மற்றும் கான்வே என இரண்டு நட்சத்திர சிஎஸ்கே வீரர்கள் காயத்தின் காரணமாக இடம்பெற மாட்டார்கள் என்பது உறுதியாகவே தெரிகிறது. எனவே இவர்களது இடத்தில் முஸ்தாஃபிசூர் மற்றும் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்தரா இருவரும் களமிறக்கப்படுவார்கள் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள். சென்னை பாஸ்ட் பவுலிங் யூனிட்டில் தீபக்சகர் உறுதியாக விளையாடுவார். துஷார் தேஷ்பாண்டே, சர்துல் தாக்கூர் மற்றும் முகேஷ் சௌத்ரி மூவரில் எந்த இரண்டு பேர் விளையாடுவார்கள் என்பது தெரியவில்லை.

அதே சமயத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எடுத்துக் கொள்ளும் பொழுது, அந்த அணிக்கு ரஜத் பட்டிதார் திரும்பி இருப்பது நல்ல விஷயமாக அமைந்திருக்கிறது. கேமரூன் கிரீன் புதிய வரவாக அவர்களுக்கு பலம் சேர்க்கிறார். வேகப்பந்து வீச்சில் இந்த முறை ஆகாஷ் தீப் அதிக போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்களுடைய சுழற்பந்துவீச்சு துறைதான் சற்று பின்னடைவாக காணப்படுகிறது.

மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெறுகின்ற காரணத்தினால் டிக்கெட் பெறுவதில் ரசிகர்களுக்கு எந்தவித சிரமமும் இருக்கக் கூடாது என்று, இந்த முறை முழுமையாக எல்லா டிக்கெட்டுகளும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக மைதானத்தில் நேரில் டிக்கெட் வாங்க வரும் பொழுது இருந்த சிரமங்கள் இனி இருக்காது.

- Advertisement -

இதையும் படிங்க : ஆண்கள் ஆர்சிபி கூட எங்கள சேர்த்து வச்சு பார்க்காதிங்க.. கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 18ஆம் தேதி நடக்கிறது. மேலும் டிக்கெட் விலை 1700, 4000, 4500, 7500 என நான்கு விலைகளில் விற்கப்படுகிறது.

சி, டி, இ லோயர் டிக்கெட்டின் விலை 1700 ரூபாய்.
சி, டி, இ, ஐ, ஜே, கே, அப்பர் டிக்கெட்டின் விலை 4000 ரூபாய்.
ஐ, ஜே, கே லோயர் டிக்கெட்டின் விலை 4500.
கேஎம்கே டெரஸ் டிக்கெட்டின் விலை 7500 ரூபாய்.