8000 பேர்.. சின்ன விஷயம் ஆனா பெரிய சிந்தனை.. சிஎஸ்கே செய்த காரியம்.. ரசிகர்கள் பாராட்டு

0
290
CSK

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 11 போட்டிகளில் ஆறு போட்டிகளை வென்று 12 புள்ளிகள் உடன் பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பில் வலிமையாக நீடிக்கிறது. மீதமுள்ள மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை வெல்லும் பொழுது ப்ளே ஆப் சுற்றில் இருக்கும். இந்த நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் சென்னைக்குள் ஒரு சிறப்பான வேலை செய்திருக்கிறது.

தற்போது ஐபிஎல் தொடரில் சந்தை மதிப்பு மற்றும் ரசிகர்களின் பலம், வெற்றி என மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சம அளவில் இருக்கின்றன என்று கூறலாம். இவர்களுக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக இவர்கள் ஐபிஎல் களத்தில் இருந்து வெளியில் வந்தும் சில சமூகப் பணிகள் சிலவற்றை செய்து வருகிறார்கள். நடப்பு ஐபிஎல் தொடரில் பெண் குழந்தைகளை ஐபிஎல் தொடருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அழைத்து வந்தது. மேலும் பெண் கல்வி தொடர்பான விழிப்புணர்வுக்கு அதை பயன்படுத்தியது.

இதே போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் மின்சார வசதி இல்லாத ஏழை குடும்பங்களுக்கு சோலார் மின்சார வசதியை குறிப்பிட்ட எண்ணிக்கையில் செய்து கொடுத்து இருக்கிறது. ஆர்சிபி அணி பசுமை சார்ந்து மரம் நடுவது தொடர்பாக சில வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக, சென்னை மாநகரத்தில் பஸ் கண்டக்டர்கள் 8000 பேருக்கு இரும்பு விசிலை கொடுத்திருக்கிறது. செலவு சிறியதாக இருந்த போதிலும் கூட, பிளாஸ்டிக் தவிர்ப்பு என்கின்ற பெரிய விஷயத்திற்கு மிக எளிமையான முறையில் விழிப்புணர்வை சிஎஸ்கே ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி இந்த வேலையை கண்டிப்பா செய்வார்.. கவலைப்பட வேண்டாம் – கவாஸ்கர் பேச்சுக்கு பின் ஹைடன் பேட்டி

தற்பொழுது சிஎஸ்கே செய்துள்ள இந்த விஷயம் சமூக வலைதளங்களில் அந்த அணியின் ரசிகர்களால் அதிக அளவில் பரப்பப்பட்டு வருகிறது. களத்தில் சில புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்து ஆச்சரியப்படுத்தும் சிஎஸ்கே அணி நிர்வாகம், களத்திற்கு வெளியிலும் அதே மாதிரி புத்திசாலித்தனமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறது.