அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மெகா ஏலத்துடன் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தோனி சிஎஸ்கே அணியின் தக்கவைக்கப்படுவாரா? என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படியான நிலையில் தோனிக்காக ஒரு குறிப்பிட்ட விஷயத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தாங்கள் கேட்கவில்லை என சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியிருக்கிறார்.
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு, ஒரு அணிக்கு எத்தனை வீரர்கள் தக்கவைக்கப்படலாம் என்பது குறித்து இன்னும் எந்த விதமான நம்பக்கூடிய தகவல்களும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து வரவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் மெகா ஏலம் குறித்து சில விஷயங்களை ஆலோசிப்பதற்காகவும், ஐபிஎல் அணி உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்பதற்காகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அந்த கூட்டத்தில் பல விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
மிகக் குறிப்பாக குறிப்பிட்ட அந்த கூட்டத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் மகேந்திர சிங் தோனியை அன்கேப்டு பிளேயர்கள் லிஸ்டில் வைக்குமாறு கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்தன. அப்படி அவரை அந்த லிஸ்டில் சேர்த்தால் நான்கு கோடி ரூபாய்க்கு சி எஸ் கே அணியால் தக்க வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இதுகுறித்து பேசியிருக்கும் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறும்பொழுது “எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. நாங்கள் மகேந்திர சிங் தோனிக்காக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இப்படி எதையும் கேட்கவில்லை. மேலும் அன்கேப்டு பிளேயர்கள் விதி மீண்டும் கொண்டுவரப்படலாம் என அவர்கள் தரப்பிலிருந்துதான் கூறப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியம் இது குறித்து விரைவில் விதிகளை அறிவிக்கும்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : சூர்யாவை சும்மாதான் வச்சிருக்காங்க.. ஹர்திக்தான் ஃபியூச்சர் கேப்டன்.. காரணம் இதான் – ஹர்ஷா போக்லே பேச்சு
அதே சமயத்தில் இது குறித்து ஏற்கனவே பேசி இருக்கும் மகேந்திர சிங் தோனி கூறும் பொழுது “நான் சிஎஸ்கே அணிக்கு விளையாடுவேனா என்பது குறித்து முடிவெடுக்க இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. பிசிசிஐ என்ன முடிவு எடுக்கிறது என்று நாம் பார்க்க வேண்டும். தற்பொழுது பந்து நம்முடைய கோர்ட்டில் இல்லை. இதுகுறித்து விதிகள் வெளியான பிறகு நான் என்னுடைய முடிவை அறிவிப்பேன். அது நிச்சயமாக அணியின் நலனை முன் வைத்து எடுக்கப்பட்ட முடிவாகவே இருக்கும்” என்று கூறியிருந்தார்.






