190 ரன் அடிச்சும்.. நாங்க தோக்க இந்த 2 விஷயம்தான் முக்கிய காரணம்.. இத மாத்தவே முடியல – தோனி பேச்சு

0
413
Dhoni

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு சாம் கரன் 47 பந்தில் 88 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் பவுலர் சாகல் 19ஆவது ஓவரில் மொத்தம் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

பஞ்சாப் கிங்ஸ் வெற்றி

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றியை உறுதிப்படுத்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 19.4 ஓவரில் இலக்கை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் புள்ளி பட்டியலில் 10 போட்டிகளில் 13 புள்ளிகள் எடுத்து இரண்டாவது இடத்தை பிடித்தது. இத்துடன் இந்த ஐபிஎல் தொடரில் முதல் அணியாக சிஎஸ்கே பிளே ஆப் வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக இழந்து வெளியேறியது.

- Advertisement -

தோல்விக்கு காரணம் இதுதான்

இது குறித்து தோனி பேசும் பொழுது “இந்த தொடரில் இந்த முறைதான் சிறப்பாக பேட்டிங் செய்திருக்கிறோம். ஆனால் நாங்கள் எடுத்த ரன்கள் போதுமா என்றால் கிடையாது. நாங்கள் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரன்கள் எடுத்திருக்க வேண்டும். நாங்கள் 20 ஓவர்களில் கடைசி நான்கு பந்துகளை விளையாடவில்லை. மேலும் 19வது ஓவரில் நாங்கள் நான்கு விக்கெட்டுகளை இழந்தோம். மிக நெருக்கமான போட்டியில் இரண்டு ஓவர்கள் என்பது மிகப்பெரிய விஷயம். நாங்கள் இதை வீணடித்து விட்டோம்”

இதையும் படிங்க 5 வருடம் கழித்து.. சாதனை படைத்த சுட்டிக் குழந்தை.. சுரேஷ் ரெய்னாவின் ரெக்கார்டை முறியடித்து அபாரம்.. ஐபிஎல் 2025.. CSK vs PBKS

“சாம் கரன் ஒரு போராளி. அவருக்கு எப்பொழுது வாய்ப்புக் கொடுத்தாலும் அதற்கு மிகக் கடினமாக உழைக்கிறார். துரதிஷ்டவசமாக அவருக்கு எங்களால் மெதுவான ஆடுகளங்களில் வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. இன்று தான் சரியாக அவருக்கான ஆடுகளமாக இருந்தது. இதேபோல பிரிவிஸ் இருவரும் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். மேலும் பிரிவிஸ் நல்ல பந்துகளை பவுண்டரி அடிக்க முடிந்தவர். மேலும் நல்ல ஃபீல்டர். அவர் அணிக்கு நல்ல ஆற்றலை கொண்டு வருகிறார். சிஎஸ்கே அணி தொடர்ந்து செல்லும் பொழுது இந்த இரண்டு இளம் வீரர்கள் முக்கியமானவர்களாக இருப்பார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -