சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் சென்னை அணிக்காக மூன்றாவது வரிசையில் களம் இறங்கி விளையாடிய சாம் கரண் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்து இருக்கிறார்.
ஷாம் கரண் சிறப்பான ஆட்டம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 50 ஆவது போட்டியில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்த நிலையில் சிஎஸ்கே பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேக் ரசீத் மற்றும் ஆயுஸ் மாத்ரே ஆகியோர் களம் இறங்கிய நிலையில் ஆயுஷ் மாத்ரே 7 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற மூன்றாம் இடத்தில் சாம் கரண் களம் இறங்கினார்.
ஆனால் மற்றொரு துவக்க வீரர் ஷேக் ரசித் 6 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற, ஜடேஜா 18 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் சிஎஸ்கே அணியின் புதிய நட்சத்திரம் டெவால்ட் ப்ரெவிஸ் உடன் ஷாம் கரண் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி நான்காவது விக்கட்டுக்கு 50 பந்துகளில் 78 ரன்கள் குவித்தது. இதில் ப்ரெவிஸ் 32 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற, மறுமுனையில் சாம் கரன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சுரேஷ் ரெய்னாவை முந்தினார்
இதில் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த நிலையில் இறுதியாக 47 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸ் என 88 ரன்னில் இறுதியாக ஆட்டம் இழந்தார். கடைசியாக ஷாம் கரண் 2020 ஆம் ஆண்டு இதே சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அரை சதம் அடித்தார். அதற்குப் பிறகு ஐந்து வருடம் கழித்து மீண்டும் இதே சிஎஸ்கே அணிக்காக பஞ்சாப் அணிக்கு எதிராக அரை சதம் அடித்திருக்கிறார்.
இதையும் படிங்க:ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக.. சாஹல் 2 புதிய சாதனைகள்.. சிஎஸ்கே சரித்திரத்தில் முதல் சோகம்
அதுமட்டுமல்லாமல் மூன்றாவது வரிசையில் களம் இறங்கி 88 ரன்கள் குவித்து அதன் மூலமாக 87 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்த சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்து இருக்கிறார். ஆனால் இதே மூன்றாவது வரிசையில் சுரேஸ் ரெய்னா களம் இறங்கி 98, 99, 100 ரன்கள் குவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணிக்காக மூன்றாவது வரிசையில் களம் இறங்கி அதிக ரன்கள் குவித்த வீரராக மைக்கேல் ஹசி 116 ரன்கள் குவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






